Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழில் துறை வளர்ச்சி அதிகரிப்பு!

Webdunia
வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (15:29 IST)
தொழில் துறை வளர்ச்சி ஜூலை மாதத்தில் அதிகரித்துள்ளது.

இதற்கு முந்தைய இரண்டு மாதங்களில், தொழில் துறை வளர்ச்சி குறைந்து இருந்தது.

ஜூலை மாதம் இயந்திரங்கள், நுகர்வோர் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் தொழில் துறை உற்பத்தி 7.1 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் அளவை பொருத்தே, தொழில் துறை உற்பத்தி கணக்கிடப்படுகிறது.

சென்ற வருடம் ஜூலை மாதத்தில் தொழில் துறை உற்பத்தி 8.3% ஆக இருந்தது.

பொருளாதார வளர்ச்சியை கணக்கிடும் இயந்திரங்கள் மற்றும் தளவாடங்களின் உற்பத்தி 21.9% ஆக அதிகரித்துள்ளது.

இரண்டு இலக்கமாக இருக்கும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்த நடவடிக்கைகளால் தொழில் துறை உற்பத்தி குறையும் என்று பல்வேறு மட்டங்களில் கருத்து தெரிவிக்கப்பட்டது. தொழில் துறை உற்பத்தி 6 விழுக்காடு என்ற அளவில் இருக்கும் என கருதப்பட்டது.

இந்த எதிர்பார்ப்பை விட அதிகரித்து, 7.1% உள்ளது.

இது குறித்து ஆக்சிஸ் வங்கியைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் சகுதா பட்டாச்சார்யா கருத்து தெரிவிக்கையில், இந்த தொழிற் துறை வளர்ச்சி, எதிர்பார்த்ததை விட அதிகம் என்று கூறினார்.

நுகர்பொருள்களின் உற்பத்தி 11.2% அதிகரித்துள்ளது. (சென்ற வருடம் ஜூலை 2.7%).

மின் உற்பத்தி 4.5% (சென்ற வருடம் ஜூலை 7.5%).

சுரங்க தொழில் உற்பத்தி 5% (சென்ற வருடம் ஜூலை 3.2%).



எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments