Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல் கொள்முதல் பாதிப்பு!

Webdunia
இந்த கரீப் பருவத்தில் நெல் கொள்முதல் குறைந்துள்ளது.

மத்திய, மாநில அரசுகளுக்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்கிறது.

இந்த கரீப் பருவத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட, நெல் கொள்முதல் குறைந்துள்ளது.

கரீப் பருவத்தின் நெல் கொள்முதல், செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும். இந்த பருவத்தில் 16 லட்சத்து 50 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் 13 லட்சத்து 30 ஆயிரம் டன் மட்டுமே கொள்முதல் செய்துள்ளது. இது இலக்கைவிட 2.5 லட்சம் டன் குறைவு.

இதற்கு காரணம் காவிரி பாசன பகுதிகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டதே. இந்த மாவட்டங்களில் சராசரியாக 4 லட்சம் டன் கொள்முதல் செய்யப்படும். ஆனால் இந்த வருடம் இதுவரை குறைவாகவே நெல் கொள்முதல் ஆகியுள்ளது.

இதுவரை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் 13.30 லட்சம் கொள்முதல் செய்துள்ளது. இந்த மாதத்தில் மீதம் உள்ள இருபது நாட்களில் 75 ஆயிரம் டன் கொள்முதல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையும் சேர்த்தால் கூட கரிப் பருவத்தின் கொள்முதல் சுமார் 2 லட்சம் டன் குறைவாக இருக்கும்.

மத்திய அரசு கரீப் பருவத்தின் ஆதார விலையாக (கொள்முதல்) குவி‌‌ண்டாலுக்கு ரூ.850 என நிர்ணயித்தது. மாநில அரசு ஊக்கத்தொகை ரூ.170 வழங்குவதாக அறிவித்தது.

( விவசாயிகளுக்கு மாநில அரசின் ஊக்கத்தொகையும் சேர்த்து குவி‌ண்டாலுக்கு ரூ.1,020 கிடைக்கும்).

இந்த கரீப் பருவத்தில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 3 லட்சத்து 82 ஆயிரம் டன், தஞ்சை மாவட்டத்தில் இருந்து 3 லட்சத்து 79 ஆயிரம் டன், நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து 2 லட்சத்து 35 ஆயிரம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் இருந்து 55 ஆயிரம் டன், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து 36 ஆயிரம் டன், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து 28 ஆயிரம் டன், ஈரோடு, திருவ‌ண்ணாமலை மாவட்ட‌த்‌தில் இருந்து தலா 25 ஆயிரம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

காவிரி பாசன பகுதிகள் அல்லாத மற்ற மாவட்டங்களில் விவசாயிகளின் வீட்டிற்கே சென்று நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதற்காக நடமாடும் கொள்முதல் நிலையங்கள் இயக்கப்பட்டன. இதற்கு விவசாயிகளிடம் இருந்து நல்ல வரவேற்பு இருந்தது. விவசாயிகள் ஆர்வமுடன் நெல் விற்பனை செய்தனர்.

வரும் குறுவை பருவத்தில் நான்கு லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய முடியும் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments