Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழில் வளர்ச்சி பாதிப்பு!

Webdunia
ஜூலை மாதத்தில் ஆறு முக்கியமான தொழில் வளர்ச்சி குறைந்துள்ளது.

இந்த வருடம் ஜூலை மாதத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி, உருக்கு உற்பத்தி, உட்பட தொழில் துறையின் முக்கியமான ஆறு தொழில்களின் வளர்ச்சி 4.3 விழுக்காடாக உள்ளது. இவற்றின் வளர்ச்சி சென்ற வருடம் ஜூலை மாதத்தில் 7.2 விழுக்காடாக இருந்தது.

இதில் ஆறுதல் அளிக்கும் விஷயம், ஜூன் மாதத்தைவிட, ஜூலை மாதம் சிறிது முன்னேற்றம் அடைந்துள்ளது.

( இந்த ஆறு வகை தொழில்களின் வளர்ச்சி ஜூன் மாதத்தில் 3.4 விழுக்காடாக இருந்தது).

இந்த ஜூலை மாதத்தில் உருக்கு உற்பத்தியின் வளர்ச்சி 1.9% உள்ளது. (சென்ற வருடம் ஜூலை மாதம் 10.8%).

கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்திருந்துள்ளது. அதே நேரத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு துறை வளர்ச்சி 11.8% உள்ளது.

இந்த நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான முதல் நான்கு மாதங்களில், இந்த முக்கியமான அடிப்படைத் தொழில்களின் வளர்ச்சி 3.7% உள்ளது. (சென்ற வருடம் 6.6%).

இந்த தொழில்கள் இந்தியாவின் தொழில் வளர்ச்சியை கணக்கிடும் அட்டவணையில் 26.68 விழுக்காடு மதிப்பை பெற்றுள்ளன. இவற்றின் வளர்ச்சியை பொறுத்தே நாட்டின் பொருளாதார வளர்ச்சி இருக்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments