Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாயுடன் வர்த்தகம் - இ‌ந்தியா முதலிடம்!

Webdunia
செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (16:53 IST)
துபாயுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.

இதுவரை துபாயுடன் இறக்குமதி-ஏற்றுமதி வர்த்தகம் செய்வதில் சீனா முதலிடத்தில் இருந்ததது.

இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில், சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா முதல் இடத்திற்கு வந்துள்ளது.

துபாயின் புள்ளிவிபர துறையின் அறிக்கையின் படி, இந்தியாவுக்கும், துபாய்க்கும் இடையிலான இரு தரப்பு வர்த்தகம் 6.57 பில்லியன் (1 பில்லியன்=100 கோட ி) டாலராக அதிகரித்துள்ளது. இது சென்ற வருடம் முதல் மாதத்தை விட 49.6 விழுக்காடு அதிகம் (சென்ற வருடம் முதல் ஆறு மாதம் 4.38 பில்லியன் டாலர்).

துபாய் ஏற்றுமதி செய்த நாடுகளிலும், இந்தியா முதலிடத்தில் உள்ளது. துபாயில் இருந்து 2.26 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய வருடத்தை விட 29.9 விழுக்காடு அதிகம் (சென்ற வருடம் முதல் ஆறு மாதம் 4.98 பில்லியன் டாலர்).

துபாயுடனான வர்த்தகத்தில் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. இரண்டு நாடுகளக்கும் இடையே 6.48 பில்லியன் டாலருக்கு வர்த்தகம் நடந்துள்ளது. இது சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் 29.9 விழுக்காடு அதிகம் (சென்ற வருடம் முதல் ஆறு மாதம் 4.98 பில்லியன் டாலர்).

அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது.

துபாயின் கச்சா எண்ணெய் அல்லாத மற்ற வகை பொருட்களின் வர்த்தகம் 54.3 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இது குறித்து புள்ளிவிபர துறையின் இயக்குநர் சையத் அல் குயுஜி கூறுகையில், துபாயின் ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகம் அதிகரித்து வருவது உலக வரத்தகத்தில் முக்கிய நாடாக மாறி வருவதை எடுத்துக் காண்பிக்கிறது. இதன் நவீன உள்கட்டுமான வசதிகள், மற்ற நாடுகளுடன் போட்டியிடும் வசதி போன்றவை, பல்வேறு துறைகளில் துபாய் முதலீடு செய்வதற்கு ஏற்ற இடமாக மாறி வருவதை காண்பிக்கிறது என்று தெரிவித்தார்.

இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் துபாயின் இறக்குமதி 52.7 விழுக்காடு அதிகரித்து இருப்பதாக புள்ளி விபர மையத்தின் மேலாளர் நசீம் அல் மேகாரி தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments