Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருந்து தொழில் வளர்ச்சி கருத்தரங்கு!

Webdunia
செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (16:49 IST)
இந்தியாவில் உள்ள மருந்து உற்பத்தி நிறுவனங்கள் முக்கியமான கால கட்டத்தில் உள்ளன. இவற்றின் வளர்ச்சி 2010-11ஆம் ஆண்டிற்கு பிறகு பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்தியா கடந்த காலத்தில் சில அத்தியாவயசியமான, அடிப்படையான மருந்துகளை கூட அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வந்தது.

சில வருடங்களில் இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்களின் வளர்ச்சி இரு இலக்க விகிதாச்சாரத்தில் வளர்ந்துள்ளது.

இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கடந்த சில வருடங்களில் எல்லா துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளன. இப்போது பன்னாட்டு நிறுவனங்களும் மருந்து ஆராய்ச்சி முதல் உற்பத்தி செய்வது, வாங்க இங்குள்ள மருந்து நிறுவனங்களை நாடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய நிறுவனங்களின் இடைவிடாத வளர்ச்சியால், இப்போது இந்தியா உலக மருந்து உற்பத்தி மையமாக மாறி வருகிறது.

இந்த துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து விவாதிப்பதற்காக நாளை மும்பையில் அரை நாள் கருத்தரங்கு நடைபெறுகிறது. “இந்தியா பார்மா- எமர்ஜிங் குளோபல் பார்மா ஹப ் ” என்ற தலைப்பில் நடைபெறுகிறது. இதில் இத்துறையில் உள்ள நிபுணர்கள், மருந்து நிறுவன உயர் அதிகாரிகள் உட்பட பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments