Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டயோட்டாவின் “கொரலா ஆல்டிஸ்” அறிமுகம்!

Webdunia
சனி, 6 செப்டம்பர் 2008 (13:38 IST)
டயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் “கொரலா ஆல்டிஸ ் ” ரக காரை அறிமுகப்படுத்தியது.

புது டெல்லி அருகே நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ சென்டரில் நேற்று புதிய கொரலா ஆல்டிஸ் ( Corolla Altis) கார் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் டயோட்டா கிர்லோஸ்கர் ( Toyota Kirloskar) மோட்டார் நிறுவனத்தின் துணை மேலாண்மை இயக்குநர் சந்தீர் சிங் பேசுகையில், கொரலா ஆல்டிஸ் ரக கார்களில் மூன்று புதிய கார்களை அறிமுகப்படுத்தி உள்ளோம். இதன் திறன் 130 ஹார்ஸ் பவர். முந்தைய கார்களை விட 7 ஹார்ஸ் பவர் அதிகம்.

இதில் எலக்ட்ரிக் பவர் ஸ்டேரிங் உட்பட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.

இதனை விற்பனை செய்ய பெரிய அளவில் திட்டமிட்டுள்ளோம். ஒரே நேரத்தில் சூப்பர் மார்க்கெட்டுகள், விமான நிலையங்கள், நாடு முழுவதும் உள்ள விற்பனை நிலையங்களில் நடக்கும் அறிமுக விழாவில் விற்பனை செய்ய உள்ளோம். இந்த வருடத்தில் வரும் மாதங்களில் மாதத்திற்கு 2,000 கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று கூறனார்.

இந்த நிகழ்ச்சியில் டயோட்டா நிறுவனத்தின் மேலாண்மை அதிகாரி யசுஹிகோ யோகோய், ( Yasuhiko Yokoi ) கொரலா ஆல்டிஸ் தலைமை பொறியாளர் சோசிரோ ஒக்குடைரா ( Soichiro Okudair a), டயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் துணை தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர், மேலாண்மை இயக்குநர் ஹிரோஷி நககாவா ( Hiroshi Nakagawa ) ஆகியோர் கலந்து கொண்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments