Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சில்லரை வணிகம் - மாநாடு!

Webdunia
செவ்வாய், 2 செப்டம்பர் 2008 (17:01 IST)
சில்லரை வணிகத்தின் ( Retail Selling) வளர்ச்சி பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கு நடைபெற உள்ளது.

இந்தியாவில் சில்லரை வணிகத்துறையில் ( organised retailing) ரிலையன்ஸ், டாடா, சுபிக்சா, ஸ்பென்ஷர், பிக் பஜார் போன்ற பெரிய நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இவை பல சங்கிலி பின்னல் போல் பல நகரங்களில் சூப்பர் மார்க்கெட்டுகளை திறந்துள்ளன. இதில் கடுகு முதல் கார் வரை கூட விற்பனை செய்யப்படுகிறது.

சில்லரை வணிகத்தின் வளர்ச்சி, உரிம நிறுவனங்கள் (பிரான்சிஸ்), தற்போது சிறிய அளவில் மளிகை கடை வைத்துள்ளவர்கள், அதன் பெரிய வியாபார நிறுவனமாக வளர்ச்சி அடைய செய்தல் ஆகியை பற்றிய கருத்தரங்கு நடைபெற உள்ளது.

இதை தென் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கம் ((SICCI-சிக்கி) ஏற்பாடு செய்துள்ளது.

இந்த கருத்தரங்கு சென்னையில் வருகின்ற ஐந்து மற்றும் ஆறாம் தேதி நடைபெறுகிறது.

இந்த கருத்தரங்கை டைட்டன் இன்டஸ்டிரிஸ் மேலாண்மை இயக்குநர் துவக்கி வைக்கிறார்.

இந்த கருத்தரங்கு குறித்து தென் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்க தலைவர் எம்.பாலசுப்ரமணியன் கூறுகையில், இந்த இரண்டு நாள் கருத்தரங்கில், இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து 250 க்கும் மேற்பட்டவர்கள் பிரதிநிதிகளாக பங்கேற்க உள்ளனர்.

இந்த கருத்தரங்கள் வியாபாரம். கடை நிர்வாகம், நுகர்வோர் தேவை உட்பட சில்லரை வணிகத்திற்கு தேவையான பல அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்படும் விஷயங்கள், சூப்பர் மார்க்கெட்டுகளில் பல்வேறு பிரிவுகளின் மேலாளர்கள், விற்பனையாளர்கள், மாணவர்கள் ஆகியோர் சில்லரை வணிகம் பற்றி புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். இதில் உள்ள வாய்ப்புக்கள், திறனை வளர்த்துக் கொள்ளல் பற்றி புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

சில்லரை வணிகத்தில் ஏற்பட்டு வரும் வளர்ச்சி, எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி விவாதிக்க வாய்ப்பாக அமையும்.

தற்போது சில்லரை வணிக துறை முக்கியமான காலகட்டத்தில் உள்ளது. இது குறித்து விவாதிக்க சிறந்த நேரம். இனி ஒவ்வொரு வருடமும் சில்லரை வணிகம் குறித்த கருத்தரங்கு நடத்தப்படும் என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments