Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு விற்பனை!

Webdunia
சனி, 23 ஆகஸ்ட் 2008 (13:54 IST)
மத்திய அரசுக்கு சொந்தமான பி.இ.சி. லிமிடெட் ( Projects -Equipments-Commodities Limited) இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு வகைகளை விற்பனை செய்ய உள்ளது. இதற்கான விலைப்புள்ளிகளை மொத்த வியாபாரிகளிடம் இருந்து கோரியுள்ளது.

இது விற்பனை செய்ய உள்ள பருப்பு வகை பற்றிய விபரம் வருமாறு :

துவரம் பருப்பு 3,064 டன், கொண்ட கடலை (சென்னா) 1,947 டன், உளுந்து 3,665 டன், பயத்தம் பருப்பு 35 டன், மைசூர் பருப்பு 7.5 டன். இவை மும்பை, சென்னையில் உள்ள கிடங்குகளில் உள்ளன.

இதற்கான விலைப்புள்ளி சமர்பிக்க கடைசி நாள் 26-08-08 மதியம் 3 மணி.

பட்டாணி விற்பன ை!

இதே போல் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பட்டாணி விற்பனை செய்வதற்கும் மொத்த வியாபாரிகளிடம் இருந்து விலைப்புள்ளிகளை கேட்டுள்ளது.

இது மும்பையில் உள்ள கிடங்குகளில் 14,742 டன் இருப்பில் உள்ளது. தூத்துக்குடியில் உள்ள 10,861 டன் இருப்பில் உள்ளது. இதை வாங்க விரும்பும் வியாபாரிகள் குறைந்த பட்சம் 3 ஆயிரம் டன்னுக்கு விலைப்புள்ளி சமர்ப்பிக்க வேண்டும்.

விலைப்புள்ளிகளை 26-08-08 நண்பகல் 2.45 மணி வரை சமர்ப்பிக்கலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments