Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உருக்கு, இரும்பு பொருட்கள் விலை உயராது!

Webdunia
வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (15:45 IST)
உருக்கு, இரும்பு பொருட்களின் விலைகளை அதிகரிக்காமல் இருக்க உருக்கு உற்பத்தி ஆலைகள் சம்மதம் தெரிவித்துள்ளன.

இரும்பு, உருக்கு கம்பி, தண்டவாளம், உருளை போன்ற பொருட்களின் விலையை உயர்த்தாமல், தற்போதைய நிலையிலேயே பராமரிக்க சம்மதித்து இருப்பதாக அரசு கூறியுள்ளது.

பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜூலை 26ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 12 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு உருக்கு துறை அமைச்சர், செயலாளர் ஆகியோர், உருக்கு ஆலைகளின் பிரதிநிதிகளுடன் விலை உயர்வு குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது ஆகஸ்ட் 7ஆம் தேதிவரை விலையை உயர்த்த மாட்டோம் என்று வாக்குறுதி அளித்தனர். இந்த காலக்கெடு முடிவடைந்து விட்டது.

இதனால் உருக்காலைகள் விலையை உயர்த்த போவதாக அறிவித்து இருந்தன.

இந்நிலையில் இன்று மத்திய உருக்கு துறை செயலாளர் பிரமோத் ரஸ்தோகி செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசு விலை உயர்வை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உருக்கு ஆலைகள் விலை அதிகரிப்பதில்லை என்றும், உருக்கு பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதில்லை என்று உறுதியளித்துள்ளன. ஆனால் எத்தனை மாதத்திற்கு விலையை மாற்றுவதில்லை என்று எவ்வித காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

பணவீக்கத்தை கணக்கிடும் அளவு கோலில் உருக்கு, இரும்பு போன்ற உலோகங்களின் பிரிவுக்கு 10 விழுக்காடு மதிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் விலையை அதிகரித்தால் பணவீக்கம் அதிகரிப்பதுடன், தொழிற் துறை, கட்டுமானத்துறை உட்பட பல்வேறு பிரிவுகள் பாதிக்கப்படும்.

பிரதமர் மன்மோகன் சிங்கை சென்ற மே மாதம் 7ஆம் தேதி உருக்கு ஆலை நிர்வாகிகள் சந்தித்து பேசினார்கள். அப்போது உருக்கு தகடு போன்றவைகளின் விலையை டன்னுக்கு ரூ.4 ஆயிரம், இரும்பு கம்பி போன்றவைகளின் விலையை டன்னுக்கு ரூ.2,000 குறைப்பதற்கு சம்மதித்தனர்.

இதன் படி உருக்கு ஆலைகள் விலையை குறைத்தன. அப்போது இந்த விலை குறைப்பு மூன்று மாதங்களுக்கு மட்டுமே. அதன் பிறகு விலையை அதிகரிப்பதா என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று அறிவித்தன.

உருக்கு ஆலைகள் பயன்படுத்தும் இரும்பு தாது, உலை கரி விலைகள் அதிகரித்து விட்டன. இதனால் இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து உற்பத்தி செலவு 60 விழுக்காடு அதிகரித்துள்ளது.

குறிப்பாக நிலக்கரி விலை கடந்த ஒரு வருடத்தில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதன் விலை ஜூலை மாதம் 1 ஆம் தேதி நிலவரப்படி 1 டன் 201 டாலராக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments