Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணவீக்கம் 12% தாண்டியது!

Webdunia
வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (11:57 IST)
பணவீக்கம் 12 விழுக்காட்டை தாண்டி, 12.01 விழுக்காடாக அதிகரித்தது.

மத்திய அரசு நேற்று மாலை ஜூலை 26 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்திற்கான பணவீக்கம் 12.01 விழுக்காடாக உயர்ந்திருப்பதாக அறிவித்தது. 1995 ஆம் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு, தற்போதுதான் இந்த அளவு பணவீக்கம் அதிகரித்துள்ளது.

இதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்கம் 11.98 விழுக்காடாக இருந்தது.

மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் பணவீக்கம் கணக்கிடப்படுகிறது. ஜூலை 26 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் உயர்ந்து இருப்பதற்கு முக்கிய காரணம் உணவுப் பொருட்களான பழங்கள், பால், மசாலா பொருட்கள், முட்டை, இறைச்சி, மீன் விலை அதிகரித்திருப்பதுதான்.

அத்துடன் இரும்பு, உருக்கு, எண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது.

மத்திய அரசு அதிகரித்த பெட்ரோல், டீசல் விலையின் தாக்கத்தால் எல்லா சரக்கு கட்டண உயர்வும் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதற ்கு ஒரு காரணம்.

பணவீக்கத்தை கட்ட ு‌ படுத்தவும், பணப்புழக்கை குறைக்கவும் சென்ற வாரம் ரிசர்வ் வங்கி வட்டி விகிதம், வங்கிகளின் ரொக்க இருப்பு விகி த‌த ்தை அதிகரித்தது. இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் பணவீக்கம் 7 விழுக்காடாக குறையும் என்று ரிச்ர்வ் வங்கி எதிர்பார்க்கிறது.

மொத்த விலை பட்டியலில் ஜூலை 26 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பழங்கள் விலை 10.32%, மசாலா பொருட்கள் 13%, முட்டை, இறைச்சி, மீன் விலை 7%, பால ் விலை 8% அதிகரித்துள்ளது.

இதே போல் சமையல் எண்ணெய் விலை 17%, இரும்பு மற்றும் உருக்கு பொருட்கள் விலை 35%, உயர்ந்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments