Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியாய விலை கடைகளில் சோயா எண்ணெய்!

Webdunia
புதன், 6 ஆகஸ்ட் 2008 (18:53 IST)
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு நியாய விலை கடைகள் மூலம் சோயா எண்ணெய் வழங்க ஹரிய ானா மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து ஹரிய ானா மாநில நுகர்வோர் பொருள் வழங்கல் துறை அதிகாரி கூறுகையில், வெளிச் சந்தையில் சோயா எண்ணெய் லிட்டர் ரூ.72 முதல் ரூ.78 வரை விற்பனையாகிறது. இதை குடும்ப அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் லிட்டர் ரூ,66 க்கு விற்பனை செய்யப்படும்.

மத்திய அரசு சோயா எண்ணெயை இறக்குமதி செய்து ஹரிய ானா மாநிலத்திற்கு வழங்கும் பொறுப்பை, நஃபீட் நிறுவனத்திடம் கொடுத்துள்ளது.

இது இறக்குமதி செய்யும் விலையில் இருந்து லிட்டருக்கு ரூ.15 வரை மானிய விலையில் விற்பனை செய்யப்படும். இந்த மானியத்தை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும்.

மத்திய அரசு ஹரியானா மாநிலத்தில் நியாய விலை கடைகள் மூலம் விற்பனை செய்ய 100 டன் சோயா எண்ணெய் ஒதுக்கியுள்ளது என்று தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: திருச்செந்தூர் காவல்துறை தடை..!

ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?

23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை கொட்டப்போகுதி கனமழை: வானிலை எச்சரிக்கை..!

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் இளைஞர் மரணம்: மருத்துவமனை விளக்கம்

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

Show comments