Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிப்பு!

Webdunia
வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (16:50 IST)
இந்தியாவில் இருந்து ஜூன் மாதம் 14.66 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது சென்ற வரும் ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 23.5 விழுக்காடு உயர்வு.

கடந்த வருடம் ஜூன் மாதம் 11.87 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி ஆனது.

ஜூன் மாதத்தில் ஏற்றுமதி உயர்ந்துள்ளது போலவே, இறக்குமதியும் அதிகரித்துள்ளது. இந்த ஜூன் மாதத்தில் 24.45 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன (சென்ற ஜூன் 19.42 பில்லியன்).

இது சென்ற வருடம் ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 25.9 விழுக்காடு அதிகம். ஏற்றுமதி-இறக்குமதிக்கும் இடையே உள்ள வர்த்தக பற்றாக்குறை 9.78 பில்லியன் டாலராக உள்ளது.

இந்த நிதி ஆண்டில் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை உள்ள மூன்று மாதங்களில் மொத்தம் 42.48 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது சென்ற வருடம் 3 (ஏப்ரல்-ஜூன்) மாதங்களுடன் ஒப்பிடுகையில் 22.3 விழுக்காடு அதிகம்.

இதே மாதிரி இறக்குமதியும் அதிகரித்துள்ளது.

இந்த நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் 73.27 பில்லியன் மதிப்புள்ள பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது சென்ற வருடம் மூன்று மாதங்களுன் ஒப்பிடுகையில் 29.7 விழுக்காடு அதிகம்.

இந்த மூன்று மாதங்களில் ஏற்றுமதி-இறக்குமதிக்கும் இடையே உள்ள வர்த்தக பற்றாக்குறை 30.42 பில்லியன் டாலராக உள்ளது (சென்ற வருடம் ஏப்ரல்-ஜூன் 21.47 பில்லியன் டாலர்). இது சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் 45.5 விழுக்காடு அதிகம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments