கச்சா எண்ணெய் இறக்குமதி மதிப்பு அதிகரிப்பு!

Webdunia
வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (16:16 IST)
உலக சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், கச்சா எண்ணெய் இறக்குமதி மதிப்பு 53.4 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இந்த ஜூன் மாதம் 9.03 பில்லியன் டாலர் மதிப்புள்ள பெட்ரோலிய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளத ு ( சென்ற வருடம் ஜூன்-5.89 பில்லியன் டாலர்).

இந்த நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரை மூன்று மாதங்களில் 25.52 பில்லியன் டாலர் மதிப்பிற்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் 50.2 விழுக்காடு அதிகம ் ( சென்ற வருடம் ஏப்ரல்-ஜூன் 16.99 பில்லியன் டாலர்).

இந்த மூன்று மாதங்களில் மொத்த ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தக பற்றாக்குறை 30.42 பில்லியன் டாலராக உள்ளது (சென்ற வருடம் 45.5 விழுக்காடு).

உலக சந்தையில் இந்தியா ஏப்ரல்-ஜூன் மாதங்களில் 1 பீப்பாய் கச்சா எண்ணெய் 118.50 டாலருக்கு வாங்கியுள்ளது (சென்ற வருடம் 77.25 டாலர்).

இது வரை இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் 147 டாலராக அதிகரித்தது. இதன் விலை தற்போது 123.35 டாலராக உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக அதிமுக ஆதரவில் திருமாவளவன் முதல்வர்?' விசிக ஆதரவு கடிதம் தருவதில் தாமதத்திற்கு இதுதான் காரணமா?

அமமுக எம்.எல்.ஏ சம்மதித்து தான் கையெழுத்திட்டார்.. தவெக வெளியிட்ட வீடியோ.!

அமமுக எம்.எல்.ஏவிடம் பேரமா?.. கோபத்தில் பாஜக!.. இப்படி மாட்டிக்கிட்டாரே விஜய்?..

நாளை முதலமைச்சராக பதவியேற்கும் விஜய்.. ஏற்பாடுகள் தீவிரம்!...

118 வந்தாச்சி!. தமிழக முதல்வராகிறா விஜய்!... ஆளுநருடன் சந்திப்பு..

Show comments