Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெனிவா: முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது- லாமி!

Webdunia
திங்கள், 28 ஜூலை 2008 (20:19 IST)
ஜெனிவாவில் உலக வர்த்தக அமைப்பின் தலைமையகத்தில் வளர்ந்த - வளரும் நாடுகளின் அமைச்சர்களுக்கிடையே நடைபெற்றுவரும் தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தையில் மிக முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என அதன் தலைமை பொதுச் செயலாளர் பாஸ்கல் லாமி கூறியுள்ளார்.

வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் இடையிலான பல சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில் ஒத்த கருத்து உருவாகியுள்ளதென கூறியுள்ள லாமி, அடுத்த சில மணி நேரங்களில் தீர்வை எட்ட பேச்சுவார்த்தையை துரிதப்படுத்துமாறு கூறியுள்ளார்.

விவசாயம், விவசாயம் சாரா பொருட்களுக்கு சந்தையை திறப்பது தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஒரு முறைபடுத்தப்பட்ட வழிமுறை வரைவை இன்னும் சிறிது நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தும் நாடுகளின் அமைச்சர்களுக்கு அளிக்கப்போவதாகவும் லாமி தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமையோடு முடிந்திருக்க வேண்டிய இம்மாநாடு, உறுப்பு நாடுகளுக்கிடையே ஒத்த கருத்து ஏற்பட்டு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: விசாரணை தொடங்குகிறது மகளிர் ஆணையம்..!

ஒரே மாதத்தில் 3வது முறையாக நிலநடுக்கம்: குஜராத் மக்கள் அதிர்ச்சி..!

வகுப்பறையில் ஆபாசப் படம் பார்த்த ஆசிரியர்.. மாணவர்கள் கண்டுபிடித்ததால் ஏற்பட்ட விபரீதம்..!

யார் அந்த சார்? அண்ணா பல்கலை மாணவி விவகாரம் குறித்த போஸ்டர்.. பெரும் பரபரப்பு

பாமகவில் உறுப்பினர் தவிர்த்து அனைத்துப் பொறுப்புகளையும் துறந்த முகுந்தன்!

Show comments