Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கிகள் இணைப்பு - அமைச்சரவை முடிவு!

Webdunia
வியாழன், 24 ஜூலை 2008 (18:01 IST)
பாரத ஸ்டேட் வங்கியுடன், ஸ்டேட் பாங்க் ஆ ஃப் செளராஷ்டிராவை இணைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய ்து‌ள்ளது!

மத்திய அமைச்சரவையின் கூட்டம் இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை பற்றி மத்திய செய்தி மற்றும ஒலிபரப்ப ு‌த ் துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி செய்தியாளர்களிடம் விளக்கினார்.

அப்போது அவர ், பாரத ஸ்டேட் வங்கியுடன், ஸ்டேட் பாங்க ஆ ஃப் செளராஷ்டிராவை இணைப்பது என்று மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த முடிவு வங்கி துறையில் உள்ள போட்டிகளை எதிர்கொள்ளவும், திறனை அதிகப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ளது.

இந்த இணைப்பு 1955 ஆம் வருட பாரத ஸ்டேட் வங்கி சட்டம் பிரிவு 35(2) இன் படி உத்தரவு பிறப்பித்து நிறைவேற்றப்படும்.

அதே நேரத்தில் 1950 ஆம் வருட ஸ்டேட் பாங்க் ஆ ஃப் செளராஷ்டிரா நீக்கப்படும். இதே போல் 1959 ஆம் வருட பாரத் ஸ்டேட் வங்கி (துணை வங்கிகள்) சட்டத்தில் ஸ்டேட் பாங்க் ஆ ஃப் செளராஷ்டிராவை பற்றி உள்ள குறிப்புகள் நீக்கப்படும்.

இவை நாடாளுமன்றத்தில் பாரத் ஸ்டேட் வங்கி (த ுண ை வங்கி சட்ட திருத்தம்) கொண்டுவரப்பட்டு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளை, தாய் வங்கியுடன் இணைப்பதற்கு ஸ்டேட் பாங்க் ஆப் செளராஷ்டிரா உட்பட துணை வங்கிளில் வேலை பார்க்கும் ஊழியர்கள், அதிகாரிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கியுடன், ஸ்டேட் பாங்க் ஆ ஃப் செளராஷ்டிராவை இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை இன்று முடிவு செய்துள்ளது.

இனி படிப்படியாக மற்ற துணை வங்கிகளும் இணைக்கப்படும் என்று தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments