இந்திய விளம்பர நிறுவனங்களின் சங்கத் தலைவராக மதுகர் காமத் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Webdunia
புதன், 23 ஜூலை 2008 (16:42 IST)
இந்தியாவில் ஊடகங்களில் விளம்பரம் வெளியிடுவதற்கும், அரசு, தொழில், வர்த்தக நிறுவனங்களின் செய்தி மற்றும் தகவல் தொடர்பாளர்களாக விளம்பர நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை அட்வர்டைசிங் ஏஜென்சிஸ் அசோசியேசன் ஆஃப் இந்தியா என்ற அமைப்பில் உறுப்பினர்களாக இணைந்துள்ளன.

இந்த அமைப்பின் பொதுக்குழு கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் 2008-09 ஆம் ஆண்டுக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதன் தலைவராக முத்ரா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும்,. தலைமை செயல் அலுவலருமான மதுகர் காமத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நிர்வாக குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற உறுப்பினர்கள் விபரம் வருமாற ு:

ஜெகதீப் எஸ்.பக்சி (கான்ட்ராக்ட் அட்வர்டைசிங்), குனால் லாலானி ( கிரியான்ஸ் அட்வர்டைசிங்), எம்.ஜி. பரமேஷ்வரன் (உல்கா), நாகேஷ் அலாய் (இன்டர்பேஸ் கம்யூனிகேஷன்ஸ்), நிவிலி கோம்ஸ் (மல்டிமீடியா அக்வாரிஸ்), பிரசுன் ஜோஷி (மெக்கான் எரிக்சன் இந்தியா), பிரனேவ் பிரேம் நாராயண் (பிரேம் அசோசியேட் அட்வர்டைசிங் அண்ட் மார்கெட்டிங்), ராஜூவ் ரூயா (ஓவர்டூர் கம்யூனிகேஷன்ஸ்), சாம் பால்சரா (மெடிசன் கம்யூனிகேஷன்ஸ்), சுதிர் பி.காட் (மெக்னம் இன்டர்கிராபிக்), சுமன் ஸ்ரீவத்சா (யூரோ ஆர்.எஸ்.தி.ஜி அட்வர்டைசிங்), சுராஜித் நாக் (அட்வர்டைசிங் அண்ட் சேல்ஸ் புரமோஷன்), தபாஸ் குப்தா (பி.இ.ஐ கான்ப்ளன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்), விநோத் நாயர் (நெட்வொர்க் அட்வர்டைசிங்)

இந்த அமைப்பின் சென்ற வருட தலைவரான ஆர்.கே.சுவாமி போடோ நிறுவனத்தின் சேர்மனும், மேலாண்மை இயக்குநருமான ஸ்ரீனிவாசன் கே. ஸ்வாமி புதிய நிர்வாக குழுவின் அலுவல் உறுப்பினராக இருப்பார்.

இந்த சங்கத்தில் 88 விளம்பர நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன. இந்தியாவில் மொத்த விளம்பரங்களில் இந்த நிறுவனங்கள் 90 விழுக்காடு விளம்பரங்களைக் கையாள்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தானில் இருந்து வீசப்பட்ட ஆயுதங்கள்.. பெரும் பரபரப்பு..!

வங்கக்கடலில் ஜனவரி 6-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. வானிலை ஆய்வு மையம்..!

கடலுக்குள் விழுந்த கார்.. ஒருவர் பரிதாப பலி.. புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோகம்..!

ராகுல் காந்திக்கு எதிராக வந்த ஆய்வு முடிவுகள்.. 83.61% சதவீத மக்கள் ராகுல் கருத்துக்கு எதிர்ப்பு..!

600 கிலோ எடையுடன் கின்னஸ் சாதனை படைத்தவர் திடீர் மரணம்.. உறவினர்கள் சோகம்..!

Show comments