குருவாயூர் கோவிலுக்கு வங்கி மூலம் காணிக்கை!

Webdunia
செவ்வாய், 22 ஜூலை 2008 (12:28 IST)
கேரளாவில் அமைந்துள்ள குருவாயூர் கோவிலுக்கு வங்கி மூலம் நேரடியாக காணிக்கை செலுத்தும் வசதியை செளத் இந்தியன் வங்கி துவக்கியுள்ளது.

கேரளாவில் புகழ் பெற்ற கோவிலான குருவாயூரில் அமைந்துள்ள குருவாயூரப்பனுக்கு இந்தியாவிலும் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலும் பக்தர்கள் உள்ளனர். இவர்கள் செளத் இந்தியன் வங்கியின் இணைய பணபரிமாற்ற சேவை மூலம் கோவிலுக்கு நேரடியாக காணிக்கை செலுத்தும் வசதி திருச்சூரில் தொடங்கி வைக்கப்ட்டது.

குருவாயூர் தேவஸ்தான கமிட்டியின் சேர்மன் தோட்டாதில் ரவீந்திரன், செளத் இந்தியன் வங்கி மூலம் காணிக்கை செலுத்தும் சேவையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும் போது, இந்த வசதி ராமாயன மாதத்தின் முதல் நாளில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த வங்கி மூலம் செலுத்தும் காணிக்கைக்கு வங்கி கட்டணம் இலவசம் என்று கூறினார்.

செளத் இந்தியன் வங்கியின் செயல் இயக்குநர் எம். வால்சன் பேசுகையில், வங்கி மூலம் நேரடியாக பணம் செலுத்துவாதல், உங்கள் காணிக்கை குருவாயூர் கோவிலுக்கு நேரடியாக செலுத்தப்படுகிறது. இதில் எந்த முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. எங்கள் வங்கி கூடிய விரைவில் 511 கிளைகள் மூலம் “ வழிபாட ு “ சேவைக்கும் முன்பதிவு சேவையை துவக்க உள்ளது என்று தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவறுதலாக அமெரிக்கா விமானங்களை சுட்டு வீழ்த்திய குவைத்!..

அதிமுக கூட்டணியில் ராமதாஸ்!. அன்புமணி போட்ட 3 கண்டிஷன்கள்!...

ஸ்டாலின்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது இதுதான்!.. ரஜினிகாந்த் ஓப்பன் டாக்!..

பிரேமலதா கேட்கும் தொகுதிகள்!.. துக்கம் இழந்த கூட்டணி எம்.எல்.ஏக்கள்!..

பழிக்கு பழி!..இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்!.. உயிர் தப்பினாரா நெதன்யாகு?..

Show comments