Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை குறையுமா?

- ராஜேஷ் பல்வியா

Webdunia
வியாழன், 17 ஜூலை 2008 (10:48 IST)
பங்குச் சந்தை நான்காவது நாளாக நேற்றும் சரிந்தது. பணவீக்கம் 13 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரித்தால் ரிசர்வ் வங்கி ரிபோ, வங்கிகளின் ரொக்க இருப்பு விக ி தத்தை அரை விழுக்காடு அதிகரிக்கலாம் என்று எதிர்பாப்பு உள்ளது.

இந்த தகவலாலும், மற்ற நாட்டு பங்குச் ச‌ந ்தைகளின் பாதிப்பால் இந்திய பங்குச் சந்தையில் குறியீட்டு எண்கள் குறைந்தன. இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தம் தொடங்கிய பிறகு, ஆரம்பிக்கும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் ஆரம்பிக்கும் போதே சரிவை சந்தித்தன.

இந்திய பங்குச் சந்தை தொடங்குவதற்கு முன், வர்த்தகம் துவங்கும ். ஆசிய பங்குச் சந்தைகளில் இரண்டு விதமான போக்குகளும் இருந்தன. அமெரிக்க ரிசர்வ் வங்கி சேர்மன் 15 ஆம் தேதி அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சி மேலும் குறையும். பணவீக்கமும் அதிகரிக்கும் என்று கூறியிருந்தார். இது முதலீட்ட ா ளர்களை தயக்கம் அடைய செய்தது.

ந ிய ூயார்க் சந்தையில் ஆகஸ்ட் மாதத்திற்கான கச்சா எண்ணெய் விலை செவ்வாய் கிழமை 6.44 டாலர் குறைந்து 1 பீப்பாய்க்கு விலை 138.74 டாலராக ஆனது.

இந்தியாவில் நிலவும் அரசியல் நெருக்கடியும் பங்குச் சந்தையை பாதித்தன. இடது சாரி கட்சிகள் கடந்த 8 ஆம் தேதி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டனர்.

இதனால் மத்திய அரசு சிறுபான்மை அரசாக மாறிவிட்டது. மத்திய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்காக நாடாளுமன்றத்தின் கூட்டம் ஜூலை 21 முதல் 22 வரை இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.

இது போன்ற காரணங்களினால் நேற்று பங்குச் சந்தை வர்த்தகம் நடக்கும் போது சென்செக்ஸ் 162 புள்ளிகள் சரிந்தது. இந்த வருட துவக்கத்தில் இருந்து இது வரை இல்லாத அளவு சென்செக்ஸ் 12,514 புள்ளிகளாக குறைந்தது. மீண்டும் 13 ஆயிரம் என்ற அளவை எட்டிவிட வேண்டும் என்று முயற்சிகள் நடந்தன. ஆனால் இறுதியில் 100 புள்ளி குறைந்து சென்செக்ஸ் 12,575 ஆக முடிந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி ஒரு நிலையில் 3,800 புள்ளிகளுக்கும் கீழே இறங்கியது, வர்த்தகம் நடக்கும் போது இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவு 70 புள்ளிகள் குறைந்து நிஃப்டி 3790 புள்ளிகளை தொட்டது. இறுதியில் முந்தைய நாளை விட 44 புள்ளி குறைந்து 3816 ஆக முடிந்தது.

இரண்டு பங்குச் சந்தைகளிலும் ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ஹெச்.டி.எப்.சி, எஸ்.பி.ஐ, டாடா ஸ்டீல், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, டி.எல்.எப், யூனிடெக் ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலை அதிக அளவு குறைந்தது.

இன்று பங்குச் சந்தையில் காலையில் அதிக வேறுபாடு இல்லாமல் துவங்கும். காலையில் குறைந்தால் நிஃப்டி 3800 ஐ விட குறையலாம். இவ்வாறு குறைந்தால் அதிக அளவு விற்பனை செய்வார்கள் இதனால் நிஃப்டி 3760-3715 வரை குறையும். இதற்கு மாறாக நிஃப்டி 3840 க்கும் மேல் உயர்ந்தால் அதிக அளவு பங்குகளை வாங்குவார்கள். அப்போது நிஃப்டி 3875-3910 என்ற அளவு வரை அதிகரிக்கும்.

பங்குச் சந்தையின் புள்ளி விபரங்களை ஆய்வு செய்தால் வரும் நாட்களில் நிஃப்டி 3760-3650 என்ற அளவு வரை குறைய வாய்ப்புள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

Show comments