Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொருளாதார வளர்ச்சி குறையவில்லை- காமத்!

Webdunia
செவ்வாய், 15 ஜூலை 2008 (13:45 IST)
பொருளாதார வளர்ச்சி குறைந்து வருகின்றது என்ற கருத்தை இந்திய தொழிலக கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.) தலைவர் கே.வி.காமத் கடுமையாக மறுத்துள்ளார்.

இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவரும், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் மேலாண்மை இயக்குநருமான கே.வி. காமத், பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய பொருளாதார வளர்ச்சி குறைந்து வருகிறது என்று கூறுபவர்கள், இந்திய நிறுவனங்களின் வர்த்தக அளவை அடுத்து வரும் இரண்டு காலாண்டு இலாப-நஷ்ட அறிக்கைகளை பார்த்த பிறகு வளர்ச்சியை பற்றி முடிவு செய்ய வேண்டும்.

இந்தியா நிறுவனங்கள் 700 பில்லியன் டாலர் முதல் 750 பில்லியன் டாலர் (1 பில்லியன் = 100 கோடி) வரை முதலீடு செய்து வருகின்றன. இவைகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கான ஆர்டர்களும் அதிக அளவு உள்ளது.

இந்நிலையில் சிலர் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவதாக கூறுகின்றனர். நான் அவ்வாறு நினைக்கவில்லை. கச்சா எண்ணெய் விலை உயர்வு, பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்து வருவது சவாலான விஷயம் தான்.

அதே நேரத்தில் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கான ஆர்டர்கள். சென்ற வருடத்தைவிட அதிகமாக இருக்கிறது. அதிக அளவு முதலீடு செய்யப்படுகிறது. இத்துடன் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் சேவைத் துறை 60 விழுக்காடு பங்கு வகிக்கிறது என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

Show comments