Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறைந்துவரும் அந்நியச் செலவாணி கையிருப்பு!

Webdunia
சனி, 12 ஜூலை 2008 (14:34 IST)
இந்தியாவின் அந்நியச் செலவாணி கையிருப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அந்நியச் செலவாணி கையிருப்பு (Foreign Exchange Reserve) ஜூலை 4ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 3.393 பில்லியன் (1 பில்லியன் = 100 கோடி) டாலர் குறைந்துள்ளது.

இதற்கு முந்தைய வாரத்தில் அந்நியச் செலவாணி கையிருப்பு 311.790 பில்லியன் டாலராக இருந்தது. ஜூலை 4ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 308.397 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.

அமெரிக்க டாலர் தவிர யூரோ, யென், ஸ்டெர்லிங் போன்ற அந்நியச் செலவாணிகளின் இருப்பும் டாலர் மதிப்பில் கணக்கிடப்படுகிறது. டாலருக்கு நிகரான மற்ற அந்நிய செலவாணி நாணயங்களின் மதிப்பு குறையும் போது அல்லது அதிகரிக்கும் போது இருப்பில் உள்ள இவற்றின் மதிப்பும் மாறும்.

இதன்படி இவற்றின் மதிப்பு 4.083 பில்லியன் டாலர் குறைந்துள்ளது.

இந்த பிரிவு அந்நியச் செலவாணி கையிருப்பு மதிப்பு ஜூலை 4ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 302.744 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் 298.661 பில்லியன் டாலராக இருந்தது.

அதே நேரத்தில் தங்க இருப்பு மதிப்பு சிறிது அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு ஜூலை 4ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 9.208 டாலராக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் 9.202 பில்லியன் டாலராக இருந்தது.

உலக வங்கியிடம் இருந்து கடன் பெறும் சிறப்பு அனுமதி அளவு 11 பில்லியன் டாலராக இருக்கிறது. இதன் மதிப்பு மாறவில்லை.

சர்வதேச நிதியத்தில் இந்தியாவின் இருப்பு மதிப்பு 10 லட்சம் டாலர் குறைந்துள்ளது. இது ஜூலை 4ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 517 மில்லியன் டாலராக உள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் 527 மில்லியன் டாலராக இருந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

Show comments