மின்னஞ்சல் செய்வது உள்ளிட்ட சில உயர் தொழில் நுட்ப வசதிகளுடன் வாடிக்கையாளர்களின் அனைத்து வர்த்த க, சொந்த தேவைகளை கருத்தில் கொண்டு நோக்கியா நிறுவனம் இரண்டு புதிய செல்பேசிகளை அறிமுகம் செய்துள்ளது.
webdunia photo
WD
நோக்கியா இ- 71; நோக்கியா இ-66 ஆகிய இந்த செல்பேசிகள் பயன்படுத்த எளிதான விசைப்பலைகைகளையும், பல்வேறு விதமான தகவல் அனுப்பும் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.
இ-71 செல்பேசி விலை ரூ.22,949, இ-66 செல்பேசியின் விலை ரூ.23,689. ஆகும். வாடிக்கையாளர்கள் கருத்திற்கிணங்க காலண்டர் மற்றும் தொடர்புகள் ஆகியவை இந்த இரண்டு சாதனங்களிலும் சேர்க்கப்பட்டுள்ளன. துருவுரா எஃகு (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்) உலோகத்தால் இந்த செல்பேசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த இரண்டு சாதனங்களிலும் மக்களுக்கு பிடித்தமான மல்டி-மீடியா அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
webdunia photo
WD
இதன் மூலம் பயனாளர்கள் தங்கள் மின்னஞ்சல்களை தங்கள் நேரத்தில் வாசிக்கலாம், அனுப்பலாம். மேலும் டவுன்லோட் இணைப்புகளான வேர்ட், எக்செல், பவர் பாயிண்ட் அல்லது பி.டி.எஃப். ஆகிய கோப்புகளை தங்கள் சாதனங்களில் டவுன் லோட் செய்து கொள்ளலாம். மேலும் ஆஃபீஸ் ஆவணத்தை எடிட் செய்யும் வசதி நோக்கியா இ-71 சாதனத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான இணயதள சேவை வழங்கும் நிறுவனங்களின் மின்னஞ்சல் கணக்குகளை இ-71, இ-66 சாதனங்கள் ஆதரிக்கும். ஜி மெய்ல், யாஹூ, ஹாட் மெய்ல் உள்ளிட்ட முன்னணி மின்னஞ்சல் சேவைகளை இதன் மூலம் பயன்படுத்தலாம். இதுவல்லாது செவன், விஸ்டோ என்ற தனியார் மின்னஞ்சல் வசதிகளையும் இந்த சாதனங்கள் ஆதரிக்கிறது.
இந்த சாதனம் தொழிலதிபர்களுக்கு பெரிதும் உதவுவதோடு, சிறு வணிகர்களுக்கும் உதவும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் நிறுவனத்தின் உள்ளார்ந்த மின்னஞ்சல் அதாவது இன்ட்ரா நெட் பயன்பாடுகளையும் இந்த இரு சாதனங்ளும் அனுமதிக்கிறது.
இதன் மூலம் நிறுவனம் சார்ந்த பயன்பாடுகளின் எல்லைகளை நோக்கியா விரிவாக்கியுள்ளது.