Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக அளவிலான வர்த்தக இதழ் வெளியீடு!

Webdunia
புதன், 9 ஜூலை 2008 (14:03 IST)
ஜெயின் சமூகத்தின் அமைப்பாகிய ஜெயின் இன்டர்நேஷனல் டிரேட் ஆர் கனைசே ஷன் ( JITO) ஜிடோ வேர்ல்ட் என்ற வர்த்தகம் தொடர்பான இதழை மும்பையில் வெளியிட்டுள்ளது.

இந்த அமைப்பின் நிறுவன இயக்குநரும், தலைவருமான ஹேமந்த் எம்.ஷா கூறுகையில், இந்த இதழ் ஜெயின் சமூகத்தினரின் முன் முயற்சியால் கொண்டு வரப்படுகிறது. ஆனால் இது எல்லோருக்கும் பயன்படக்கூடியது.

தற்போது பல வர்த்தக இதழ்கள் விற்பனையாகின்றன. இதில் ஒரு சில இதழ்களில் மட்டுமே செய்திகள் தெளிவாகவும், வளர்ச்சியை நோக்கியதாகவும் இருக்கிறது. நாங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக செய்திகளை வெளியிட உள்ளோம் என்று கூறினார்.

பல்வேறு நாடுகளில் வாழும் இந்த அமைப்பின் உறுப்பினர்களுக்கு 20 ஆயிரம் பிரதிகள் விநியோகிக்கப்படும். ஜூலை மாத இறுதியில் கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும். இந்த வருட இறுதிக்குள் 1 லட்சம் பிரதிகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments