Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் சரக்கு கட்டண உயர்வு ரத்து!

Webdunia
வெள்ளி, 4 ஜூலை 2008 (18:28 IST)
ரயில்வே ஜூலை 1 ஆம் தேதி முதல் உயர்த்துவதாக அறிவித்த சரக்கு கட்டண உயர்வை ரத்து செய்துள்ளது.

ரயில்வே கடந்த பத்து நாட்களுக்கு முன்பு உணவு தானியம ், உரம ், கனி ம பொருட்கள ், நிலக்கரி உட்பட பல்வேறு பொருட்களின் சரக்கு போக்குவரத்து கட்டணத்தை 5 முதல் 7 விழுக்காடு வரை அதிகரித்தது.

இந்த புதிய கட்டண விகிதம் ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்று ரயில்வே அறிவித்திருந்தது


பாக்ஸைட ், சுண்ணாம்புக் கல ், பெட்ரோலியப ் பொருட்கள் ஆகியவைகளுக்கு கட்டணம் 7 விழுக்காடு அதிகரிக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

சரக்கு கட்டண அட்டவணை பட்டியலின் 120 வரிசையின் கீழ் உள்ள உரம ், உணவு தானியம ், மாவுப் பொருட்கள ், பருப்ப ு, சிறு தானியம ், பிண்ணாக்க ு, எண்ணை வித்த ு, தோல ், ரப்பர ், பிளாஸ்டிக ், இயந்திரம ், இயந்திரக் கருவிகள் ஆகியவைகளின் சரக்கு கட்டணம் 7 விழுக்காடு உயர்த்தப்பட்டும் என்று அறிவித்தது.

இ‌ந்த புதிய கட்டணம் பற்றிய உத்தரவை கடந்த பத்து நாட்களுக்கு முன்பு ரயில்வேயின் எல்லா பிரிவுகளுக்கும் அனுப்பியது.

பணவீககம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், ரயில்வே கட்டண உயர்வு பல்வேறு பொருட்களின் விலையை அதிகரிக்கும். இத்துடன் அரசியல் ரீதியான காரணங்களினால் ரயில்வே உயர்த்துவதாக அறிவித்திருந்த சரக்கு கட்டணத்தை ரத்து செய்துள்ளது.

இதற்கான உத்தரவை புதன்கிழமையன்று தலைமை அலுவலகத்தில் இருந்து மற்ற பிரிவுகளுக்கு அனுப்பியுள்ளது.

இதில் முந்தைய கட்டண உயர்வு உத்தரவை செயல்படுத்த வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments