Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலை அக்டோபரில் பரிசீலனை!

Webdunia
வியாழன், 3 ஜூலை 2008 (16:09 IST)
பெட்ரோல், டீசல் விலை பற்றி அக்டோபரில் பரிசீலிக்கப்படும் என்று மத்திய பெட்ரோலியத் துறை செயலாளர் எம்.எஸ்.ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் உலக பெட்ரோலியம் மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வந்துள்ள பெட்ரோலிய துறை செயலாளர் ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசும்போது, பெட்ரோலிய பொருட்களின் விலைகளை உயர்த்துவது என்பது பற்றி அக்டோபர் மாதம் பரிசீலிக்கப்படும்.

ஜூன் மாத்தில் விலை உயர்த்திய போது, மத்திய அமைச்சரவை பெட்ரோலிய விலையை அக்டோபரில் பரிசீலிக்க சம்மதம் தெரிவித்துள்ளோம்.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் விலை உயர்த்தும் வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தார்.

தற்போது பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் 145 டாலராக உயர்ந்துள்ளது. இதனால் இந்த ஆண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ஆகும் செலவு 76 விழுக்காடு அதிகரித்து 110 முதல் 120 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என்று தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments