Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிசந்தை‌யி‌ல் 30 லட்சம் டன் சர்க்கரை ‌வி‌ற்பனை: ம‌த்‌‌திய அரசு அனுமத‌ி!

Webdunia
வியாழன், 3 ஜூலை 2008 (10:23 IST)
சர்க்கரை ஆலைகள் வெளிச் சந்தையில் 30 லட்சம் சர்க்கரை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

மத்திய அரசு சர்க்கரை ஆலைகள் வெளிச் சந்தையில் சர்க்கரை விற்பனை செய்ய அனுமதி வழங்கி வருகிறது. ஜூலை முதல் செப்டம்பர் வரை மூன்று மாத காலத்தில் 30 லட்சம் டன் சர்க்கரையை, சர்க்கரை ஆலைகள் வெளிசந்தையில் விற்பனை செய்ய நேற்று அனுமதி வழங்கியது.

( சென்ற வருடம் இதே மூன்று மாதத்திற்கு 36 லட்சம் சர்க்கரை வெள ி‌ச் சந்தையில் விற்பனை செய்ய அனுமதி வழங்கியது).

இத்துடன் மத்திய அரசு சென்ற வருடம் 2007 செப்டம்பர் முதல் 2008 ஆகஸ்ட் வரையிலான காலத்திற்கு 30 லட்சம் டன் சர்க்கரையை இருப்பு வைத்தது. இந்த காலக்கெடு முடிவடைவதால், இருப்பு வைத்த சர்க்கரையையும் விற்பனை செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

இதில் 25 விழுக்காடு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் விற்பனை செய்ய வேண்டும். மீதம் உள்ள 75 விழுக்காடு சர்க்கரையை அடுத்த சர்க்கரை பருவமான அக்டோபர் முதல் செப்டம்பர் மாதத்திற்குள் விற்பனை செய்து கொள்ளலாம். இதற்கு சர்க்கரை கட்டுப்பாட்டு ஆணையாளரின் அனுமதி பெற தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கு முன் இருப்பில் இருந்த 20 லட்சம் டன் சர்க்கரையை மே முதல் செப்டம்பர் மாதத்திற்குள் விற்பனை செய்ய அனுமதி வழங்கியது.

இதனால் வெளிச் சந்தையில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்று மாதத்திற்கு 48 லட்சம் டன் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. அதிக அளவு சர்க்கரை விற்பனைக்கு வருவதால் விலை உயராது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments