Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜவுளி ஏற்றுமதியில் போட்டி: ஃபிக்கி!

Webdunia
சனி, 21 ஜூன் 2008 (16:26 IST)
இந்தியாவைச் சேர்ந்த ஆயத்த ஆடை, பின்னலாடை போன்றவைகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் உலக சந்தையில் கடுமையான போட்டியை சந்திக்க வேண்டியதுள்ளது.

ஆசியாவின் சிறிய நாடுகளான வியட்நாம், பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனங்களிடம், இந்திய ஜவுளி துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் போட்டியிட வேண்டியதுள்ளது.

ஃபிக்கி என்று அழைக்கப்படும் இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு “ அமெரிக்க ா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஜவுளி மற்றும் ஆடைகள் ஏற்றுமத ி ” என்ற தலைப்பில் ஆய்வு நடத்தியது.

இதில் இருந்து இந்திய ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள் ஆசியாவின் மற்ற நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்களிடம் இருந்து கடுமையான போட்டியை சந்தித்து வருவது தெரிந்தது.

இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளின் மொத்த ஜவுளி இறக்குமதியில் 1995ஆம் ஆண்டு இந்தியாவின் பங்கு 7.9 விழுக்காடாக இருந்தது. இது 2007இல் 7.5 விழுக்காடாக குறைந்துள்ளது.

இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி வளர்ச்சி 2005இல் 18.6 விழுக்காடாக இருந்தது. இதற்கு அடுத்த வருடம் 14.9 விழுக்காடாக குறைந்து விட்டது, 2007இல் மேலும் குறைந்து 12.6 விழுக்காடாக சரிந்து விட்டது.

ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள 25 நாடுகளுக்கு அதிக அளவு ஜவுளி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாவது நாடாக இருந்தது. இந்த நாடுகளுக்கான ஏற்றுமதி 1995ஆம் வருடத்திற்கு முந்தைய 13 ஆண்டுகளில் வருடத்திற்கு வருடம் கணிசமாக அதிகரித்தது.

ஆனால் 1996-2007 கால கட்டத்தில் ஐரோப்பிய நாடுகள் இறக்கமதி செய்யும் அளவுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் ஏற்றுமதி குறைந்துள்ளது.

அதே நேரத்தில் இந்தியாவிற்கு போட்டியாளர்களான சீனா, வங்கதேசம், வியட்நாம் போன்ற நாடுகளின் ஏற்றுமதி ஐரோப்பிய நாடுகளுக்கு (இந்தியாவைவிட) அதிக அளவு உயர்ந்துள்ளது.

அத்துடன் ஐரோப்பிய நாடுகள் இறக்குமதி செய்யும் அளவுடன் ஒப்பிடுகையில் சீனா, வங்கதேசம், வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது அதிகரித்துள்ளது.

1995 ஆம் ஆண்டில் இருந்து 2007 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதியில் வியட்நாமின் பங்கு 0.8 விழுக்காடு அதிகரித்துள்ளது,
ஆனால் இந்தியா தனது மூன்றாவது இடத்தை மட்டுமே தக்கவைத்துக் கொண்டுள்ளது.

வங்கதேசம் ஆறாவது இடத்தில் இருந்து 4வது இடத்திற்கு முன்னேறி விட்டது.

ஜவுளி இறக்குமதி செய்யும் நாடுகள் முன்பு கோட்டா முறையை கடைப்பிடித்தன. இதன் படி ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு குறிப்பிட்ட அளவு பிரித்து கொடுக்கப்படும்.
2001 இல் கோட்டா முறை ரத்து செய்யப்பட்டது.

கோட்டா முறை நீக்கப்பட்டதற்கு பிறகு இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் ஜவுளி பொருட்களின் விலை குறைந்து விட்டது. அதே நேரத்தில் சீனா, பாகிஸ்தான் ஜவுளி பொருட்களுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் ஜவுளி பொருட்களின் விலை அதிகமாக உள்ளது.

2005 முதல் 2007 வரை அமெரிக்காவின் மொத்த ஜவுளி இறக்குமதியில் இந்தியாவின் (ஏற்றுமதி) பங்கு 1.6 விழுக்காடு அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் வியட்நாமின் பங்கு 0.04 விழுக்காட்டில் இருந்து 4.7 விழுக்காடாக அதிகரித்துள்ளது. சீனாவின் பங்கு 11 விழுக்காட்டில் இருந்து 35 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவிற்கான ஏற்றுமதி அளவிலும், விலையிலும் வங்கதேசம், இந்தியாவின் அளவிற்கு நெருங்கி வருகிறது என்று ஃபிக்கி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments