Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணவீக்கம் குறையும்: ‌நி‌தி அமை‌ச்சக‌‌ம்!

Webdunia
வியாழன், 19 ஜூன் 2008 (18:55 IST)
அக்டோபர்-டிசம்பர் மாதங்களில் பணவீக்கம் நிச்சயமாக குறையும் என்று ம‌த்‌திய ‌நி‌தி அமை‌ச்சக‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

உலக சந்தையில் பல்வேறு பொருட்களின் விலையும், பெட்ரோலிய கச்சா எண்ணெய் வில ையு‌ம் அதிகரித்ததே இந்தியாவின் பணவீக்கத்திற்கு முக்கிய காரணம்.

அடுத்த ஆறு மாதங்களில் பணவீக்கம் அதிகரிக்குமா அல்லது குறையுமா என்பதே பற்றி பல்வேறு ஊகங்கள் இருக்கின்றன. ஆனால் அக்டோபர்-டிசம்பர் மாதங்களில் பணவீக்கம் நிச்சயமாக குறையும் என்று நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாத ா ர ஆலோசகர் அர்விந்த் விர்மனி செய்தியாளர்களிடம் கூறினார்.

மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் எடுத்துள்ள பொருளாதார நடவடிக்கையால் பணவீக்கம் அதிக அளவு உயராமல் கட்டுப்படுத்தப்பட்டது. அத்துடன் இந்த வருடம் பருவமழை நன்கு பெய்யும் என்பதும் சாதகமான அம்சங்கள்.

இந்தியாவைப் பொருத்த மட்டில் பணவீக்கம் என்பது முக்கியமான விஷயம். நாட்டின் பொருளாதார கொள்கையை வகுப்பவர்கள் நிலைமைகளை ஆய்வு செய்து பணவீக்கம் அதிகரிக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கின்றனர்.

ரிசர்வ் வங்கி பொருளாதாரத்திற்கு பணவீக்கம் முக்கியமான காரணியாக கருதி, அவ்வப்போது தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறது என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

Show comments