மாநிலங்கள் நிதி சந்தையில் இருந்து இந்த நிதி ஆண்டில் ரூ.59,000 கோடி கடன் வாங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மாநில அரசுகள், பழைய கடன் தவணை திருப்பி செலுத்துதல், வளர்ச்சி பணி உட்பட பல்வேறு செலவுகளுக்கு கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி சந்தையில் கடன் வாங்குகின்றன.
இந்த நிதி ஆண்டில் (2008-09) மாநில அரசுகள் நிதி சந்தையில் வாங்கும் கடன் ரூ.59 ஆயிரத்தை எட்டிவிடும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. மாநில அரசுகள் பழைய கடன் தவணைகளில் ரூ.14,371 திருப்பி செலுத்தும்.
இது வரை ஆறு மாநில அரசுகள், மாநில வளர்ச்சி கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.5,912 கோடி கடன் வாங்கியுள்ளன.
மாநிலங்களின் தேவை, நிதி சந்தையின் நிலைமை உட்பட பல்வேறு அம்சங்களை மாநில அரசுகளும், ரிசர்வ் வங்கியும் கணக்கில் எடுத்துக் கொண்டு, கடன் வாங்குவதை பரிசிலித்து முடிவு செய்கின்றன.