Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காடு!

Webdunia
வெள்ளி, 30 மே 2008 (18:34 IST)
இந்தியாவின் விவசாய துறை வளர்ச்சி எதிர்பார்த்த அளவை விட அதிகமாக இருந்து. இதனால் பொருளாதார வளர்ச்சி என்று கூறப்படும் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் மதிப்பு அளவு சென்ற நிதி ஆண்டில் (2007-08) 9 விழுக்காடாக இருப்பதாக மத்திய புள்ளி விபர அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவிக்கையில், சென்ற நிதி ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காடாக இருப்பது திருப்திகரமாக உள்ளது. இது நல்ல பொருளாதார வளர்ச்சிக்கான அடையாளமாகும் என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் உற்பத்தி துறையின் வளர்ச்சி குறைந்தது. இதை கருத்தில் கொண்டு அரசு தொழில் துறை வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று தெரிவித்தார்.

விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளின் வளர்ச்சி 2.6 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால் இதன் வளர்ச்சி எதிர்பார்த்தைவிட அதிகமாக 4.5 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் தொழில் துறை (உற்பத்தி) வளர்ச்சி 9.6 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால் இதன் வளர்ச்சி 8.8 விழுக்காடாக குறைந்துள்ளது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முந்தைய நிதி ஆண்டில் (2006-07) 9.6 விழுக்காடாகவும், 2005-06 இல் 9.4 விழுக்காடாகவும் இருந்தது.

இது சென்ற நிதி ஆண்டில் ஒன்பது விழுக்காடாக குறைந்துள்ளது.

உலக அளவில் சீனாவுக்கு அடுத்த படியாக மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நாடான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த மூன்று வருடங்களாக 9 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

விவசாய துறையின் வளர்ச்சி மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 2.9 விழுக்காடாக இருந்தது.

டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் தொழில் துறையின் (உற்பத்தி) வளர்ச்சி 9.6 விழுக்காடாக இருந்தது. ஆனால் இது மார்ச்சுடன் முடிவடைந்த காலாண்டில் 5.8 விழுக்காடாக குறைந்து விட்டது.

இதற்கு நேர் மாறாக கட்டுமானத் துறையின் வளர்ச்சி, டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 7.1 விழுக்காட்டில் இருந்து, மார்ச்சுடன் முடிவடைந்த காலாண்டில் 12.6 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

வர்த்தகம், சுற்றுலா, போக்குவரத்து, தகவல் தொழில் நுட்பம் ஆகிய துறைகள் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 11.5 விழுக்காட்டில் இருந்து, மார்ச்சுடன் முடிவடைந்த காலாண்டில் 12.4 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

Show comments