Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை எப்படி இருக்கும்?

- ராஜேஷ் பல்வியா

Webdunia
புதன், 14 மே 2008 (10:40 IST)
தேசிய பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கும் போதே, நிஃப்டி 20 முதல் 30 புள்ளிகள் வரை குறையும். காலையில் வர்த்தகம் தொடங்கும் போது நிஃப்டி 4930 முதல் 4940 என்ற அளவில் இருக்கும்.

அதற்கு பிறகு பங்குகளின் விற்பனை அதிகரித்து நிஃப்டி 4955 க்கும் மேல் குறைந்தால், அதிக அளவு பங்குகளை விற்பதை காணலாம். இதற்கு பிறகு குறுகிய நேரத்திற்கு நிஃப்டி 4925 /4885 என்ற அளவில் இருக்கும்.

தேசிய பங்குச் சந்தையில் தினசரி வர்த்தகம் நடக்கும் முறையை ஆய்வு செய்தால், நிஃப்டி குறியீட்டு எண் தொடர்ந்து குறைந்து வந்திருப்பதை காணலாம். இது மேலும் கீழ் நோக்கி செல்ல வாய்ப்பு உள்ளது.

இன்று நடக்கும் வர்த்தகத்தில் நிஃப்டி 4985 /5015/5040 என்ற அளவில் இருக்க வாய்ப்பு உள்ளது. அதற்கும் மேல் குறைந்தால், 4925 /4880/4865 என்ற அளவிற்கு குறையும்.

பங்குச் சந்தைகளில் நேற்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, சென்செக்ஸ் உயர்ந்து இருந்தது. மற்ற நாட்டு பங்குச் சந்தைகளில் சாதகமான நிலை இருந்ததால், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண்களும் அதிகரித்தன. இதே நிலை மாலை வரை நீடிக்கவில்லை. இறுதியில் நிஃப்டி 5 ஆயிரத்திற்கும் குறைந்தது.

பெட்ரோலிய நிறுவனங்களின் இழப்பில் 57 விழுக்காடு, நிதி அமைச்சகம் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டது என்ற தகவல் பெட்ரோலிய அமைச்சகத்தில் இருந்து வந்தது. இதன் பிறகு பெட்ரோலிய நிறுவனங்களின் பங்கு விலை சரிந்தது. அரசு பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த போவதில்லை. இதனால் பெட்ரோலிய நிறுவனங்கள் நஷ்டத்தை ஏற்க வேண்டியதிருக்கும. இதன் காரணமாகவே பெட்ரோலிய நிறுவன பங்குகளின் விலை சரிந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

Show comments