Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்நிய நேரடி முதலீடு 2457 கோடி டாலர்

Webdunia
சனி, 3 மே 2008 (11:38 IST)
இந்தியாவில் சென்ற நிதி ஆண்டில் (2007-08) 2,457 கோடி டாலர் வந்துள்ளது.

அந்நிய நேரடி முதலீடுகளை பெறுவதில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. (சீன ா முதலிடத்தில் உள்ளத ு). சென்ற நிதி ஆண்டில் இந்தியாவில் 2,457 கோடி டாலர் அந்நிய முதலீட்டு மற்றும் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

இது முந்தைய நிதி ஆண்டைவிட 1570 டாலர் அதிகம். (56.50 விழுக்காட ு).

அந்நிய முதலீடு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது இல்லாமல், தொழ ி‌ற ்சாலை தொடங்குவது போன்றவைகளில் நேரடியாக முதலீடு செய்கின்றன. இவை நீண்டகால முதலீடாக இருக்கும்.

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 8.7 விழுக்காடாக இருந்ததால், சென்ற நிதி ஆண்டில் இரண்டு மடங்கு அந்நிய நேரடி முதலீடு பெற்றுள்ளது.

இந்த நிதி ஆண்டில் 3,500 கோடி டாலர் அந்நிய நேரடி முதலீடு பெறுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத் கூறும் போது, அந்நிய நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு இந்தியா ஏற்ற இடமாக உள்ளது. இந்த முதலீடு அதிகரித்திருப்பது, அந்நிய நாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில், இந்தியாவின் மீது உள்ள நம்பிக்கை அதிகரிப்பதையே எடுத்துக் காட்டுகிறது என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

Show comments