Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணவீக்கம் உயர்வு!

Webdunia
வெள்ளி, 25 ஏப்ரல் 2008 (16:06 IST)
உணவு பொருட்கள், மீன் விலை அதிகரித்ததால் பணவீக்கம் 7.33 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

மத்திய அரசு ஏப்ரல் 12 ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தின் பணவீக்க விகிதம் 7.33 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக அறிவித்தது. (சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் பணவீக்க விகிதம் 6.34 விழுக்காடாக இருந்தத ு).

இதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்கம் 7.14 விழுக்காடாக இருந்தது.

விலை வாசி உயர்ந்துள்ளதால் அதிகரித்துவரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி ஏப்ரல் 29 ந் தேதி அறிவிக்க போகும் கடன் கொள்கையில் கடுமையான நடவடிக்கை இருக்கும் என்று தெரிகிறது. ரிசர்வ் வங்கி ஏற்கனவே பணவீக்க இருப்பு விகிதத்தை அரை விழுக்காடு ( ஏப்ரல் 26 மற்றும் மே 10 இரு தவணைகளி ல) அதிகரித்துள்ளது. இதனால் சுமார் ரூ.18,400 கோடி பணப்புழக்கம் கட்டுப்படுத்தப்படும்.

பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த இடதுசாரி தலைவர்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்கள்.

இன்று மக்களவையில் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசும் போது, பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார். அத்துடன் உலக அளவில் விலைகள் உயர்ந்து வருவதால், இங்கும் விலைகள் அதிகரிப்பகின்றது. ஆனால் இந்த நிலை மாறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அதே நேரத்தில் பணவீக்கத்திற்கு எதிரான நடவடிக்கையால் வளர்ச்சி விகிதம் குறையும் என்றும் சிதம்பரம கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

Show comments