Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படலாம் : சிதம்பரம்!

Webdunia
செவ்வாய், 1 ஏப்ரல் 2008 (15:13 IST)
உலக பொருளாதார வீழ்ச்சியால ், முதலீட்டாளர்கள் பொறுமை காப்பது எதிர்காலத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.

சிங்கப்பூரில் லீ குவான் யே பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதி அமைச்சர் கூறுகையில ், " உலக பொருளாதார வளர்ச்சி குறைவ ு, பணவீக்கம ், முதலீட்டின் மீதான குறைவான வட்டி போன்றவை வளரும் நாடுகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும ், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இந்திய நிதிநிலை அறிக்கை உள்நாட ு, அயல்நாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்தியாவின் வளர்ச்சி மீதி நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம். இந்த நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9 விழுக்காடாக உயரும் என்றும் எதிர்பார்க்கிறேன ்

நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள வருமான வரி குறைப்ப ு, கல்வ ி, சுகாதரம ், சுற்றுச்சூழல் ஆகியவற்றின் மீதான நிதி ஒதுக்கீடு அதிகரிப்ப ு, நிறுவனங்களின் கடன் சந்தை விரிவாக்கம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கிறத ு" என்றார்.

இயற்கை எரிபொருள் தயாரிப்புக்காக உணவு தானியங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால ், உணவுப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது குறித்து அமைச்சர் கூறுகையில ், " அமெரிக்காவில் 20 விழுக்காடு தானியங்கள் இயற்கை எரிபொருள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறத ு. இதற்கு உதாரணமாக எண்ணெய் பொருட்களின் வில ை உயர்வு உலகளவில் சிக்கனத்தன்மையை ஏற்படுத்தியுள்ளத ு" என்றார்.

கட்டாய கல்வ ி, ஆரோக்கிய மேம்பாட ு, நிலையான வாழ்க்கை முற ை, பொது சுகாதாரம ், முழு வேலைவாய்ப்பு ஆகிய சமுதாய குறிக்கோள்களை மையப்படுத்தி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அமையும் என்று ப சிதம்பரம ் உறுதி அளித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் இன்று திமுக பவள விழா பொதுக்கூட்டம்!

டாட்டா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்!

நடிகை சித்ராவின் கணவர் விடுதலை.. மேல்முறையீடு செய்த தந்தை காமராஜ்..!

மிரட்டி பணம் பறித்த புகார்: நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

பாப்பம்பாள் பாட்டி காலமானார்: மோடி, உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன் இரங்கல்!

Show comments