Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை உயருமா?

ரா‌ஜே‌‌ஷ் ப‌ல்‌வியா

Webdunia
புதன், 26 மார்ச் 2008 (10:01 IST)
இன்று பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போதே நிஃப்டி அதிகரிக்கும். நேற்றைய இறுதி நிலவரத்தைவிட நிஃப்டி 40 முதல ் 50 புள்ளிகள் வரை உயரும். இன்று காலை நிஃப்டி 4925-4940 என்ற அளவில் வர்த்தகம் நடக்க வாய்ப்புண்டு.

இதற்கு பிறகு நிஃப்டி பிரிவில் உள்ள பங்குகளை விலை அதிகரித்து 5000 முதல் 5040 வரை அதிகரிக்க வாய்ப்புண்டு. இந்த நிலையில் பங்குகளை விற்பனை செய்வதை காணலாம்.

இதற்கு மாறாக நிஃப்டி குறைய தொடங்கினால் 4910 /4940/4970 என்ற அளவிற்கு குறையும். குறைந்த நேரத்திற்கு நிஃடி 5000 /5025/5050 என்ற அளவு உயரவும் வாய்ப்பு உண்டு.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 4840 /4805/4780 என்ற அளவிற்கு குறைந்து, 4780 க்கும் குறைந்தால் அதிக அளவு பங்குகளை விற்பனை செய்வதை காணலாம்.

நேற்றைய கண்ணோட்டம்!

நீண்ட நாட்களுக்கு பின், நேற்று பங்குச் சந்தையில் முன்னேற்றம் காணப்பட்டது. நேற்று பங்குச் சந்தைகளில் அதிக அளவு குறியீட்டு எண்கள் உயர்ந்தது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். சென்செக்ஸ் 16,000 புள்ளிகளை தாண்டியது. நிஃப்டி 4850 புள்ளிகளுக்கும் அதிகரித்தது. நேற்று மட்டும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 6 விழுக்காடு அதிகரித்துள்ளன. எல்லா பிரிவு பங்குகளையும் வாங்கினார்கள்.

இந்தியாவில ் மட்டுமல்லாது எல்லா நாடுகளின ் பங்குச் சந்தைகளிலும் உயர்வ ு காணப்பட்டது. இதற்கு காரணம் அமெரிக்காவில் ஃப்யர் ஸ்டிரன்ஸ் நிறுவனத்தை, ஜே.பி.மார்கன் முதலீட்டு நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்து விலையை விட 5 மடங்கு அதிக விலையில் வாங்குவதாக அறிவித்தது. அத்துடன் அமெரிக்காவில் பிப்ரவரி மாதத்தில் வீடு விற்பனை 3 விழுக்காடு அதிகரித்து இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

நீண்ட காலத்திற்கு பிறகு பங்குச் சந்தையில் நேற்று முன்னேற்றம் காணப்பட்டது. இப்போது எழுந்துள்ள கேள்வி பங்குச் சந்தை இதே போல் முன்னேறுமா என்பது தான்.

மும்பை பங்குச் சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் உயர்ந்தன. தகவல் தொழில் நுட்பம், ரியல் எஸ்டேட், வங்கி பங்குகளின் விலை அதிக அளவு உயர்ந்தது.

டி.எல்.எப்,யெஸ் பாங்க், ரிலையன்ஸ் எனர்ஜி, ரிலையன்ஸ் கேப்பிடல், இன்போசியஸ், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஹெச்.டி.எப்.சி,பி.ஹெச்.இ.எல்,ஓ.என்.ஜி.சி, ஜே.பி அசோசியேட்ஸ், குஜராத் நிரி கோக், எடுகோம்ப், பாங்க் ஆப் பரோடா, சம்பல் பெர்டிலைசர்ஸ், பஜாஜ் ஹீந்த், எஸ்ஸார் ஆயில் ஆகிய பங்குகளை முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் வாங்கினார்கள். நேற்று பங்குச் சந்தையில் ரூ.87,660.42 கோடி மதிப்பிற்கு வர்த்தகம் நடந்தது.

சென்செக்ஸ் 928 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 16,217 ஆகவும், நிஃப்டி 267 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4877 ஆக முடிவடைந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

Show comments