Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் 22 ம் தேதி முதல் லாரிகள் வேலைநிறுத்தம்

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2008 (11:58 IST)
கர்நாடகா மாநிலத்தில் இம்மாதம் 22 ம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் குறிப்பாக ஈரோடு, கோவை, சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் வர்த்தகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் லாரிகளால் அதிகளவில் விபத்து ஏற்படுவதால், வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என கர்நாடகா மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதையடுத்து கர்நாடகா மாநிலத்துக்குள் வரும் லாரிகள் 50 கி.மீ., வேகத்தில் தான் செல்ல வேண்டும் என்ற நோக்கில் வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்று அந்த மாநிலஅரசு உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி உரிமையாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இதனால் அரசு பழைய லாரிகளுக்கு வேண்டாம், புதிய லாரிகளுக்கு மீட்டர் பொருத்தினால் போதும் என அறிவித்தது. இதையடுத்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஒருவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.புதிய லாரிகளுக்கு மட்டும் மீட்டர் பொருத்தினால் விபத்துகளை தடுக்க முடியாது. பழைய லாரிகளுக்கும் மீட்டர் பொருத்தி வேகத்தை கட்டுப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், அனைத்து லாரிகளுக்கும் மீட்டர் பொருத்தி, வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் இந்த உத்தரவை உடனே அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட்டது. இதனால் கர்நாடகா லாரி உரிமையாளர்களிடயே பெரும் பதட்டம் ஏற்பட்டது. கர்நாடக அரசும் அனைத்து லாரிகளுக்கும் மீட்டர் பொருத்தவும், வேகத்தை 50 கி.மீ.,க்குள் கட்டுக்குள் வைக்கவும் உத்தரவிட்டது. இது குறித்து விவாதிக்க லாரி உரிமையாளர் சங்க கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் வரும் 22ம் தேதி முதல் லாரிகளை இயக்க கூடாது என்று முடிவு செய்யப்பட்டது.

இம்மாதம் 22ம் தேதி முதல் கர்நாடகாவில் காலவரையற்ற லாரி வேலைநிறுத்தம் துவங்குகிறது. தமிழகத்தில் இருந்து மட்டும் தினமும் கர்நாடகா வழியாக வட மாநிலங்களுக்கு எட்டாயிரம் லாரிகள் கர்நாடகாவை தொட்டு செல்கின்றன. கேரளாவில் இருந்து தினமும் நான்காயிரம் லாரிகள் தமிழகம் வழியாக கர்நாடகாவை கடந்து செல்கின்றன. ஈரோடு மாவட்டத்தில் இருந்த ஜவுளி ரகங்கள் மற்றும் வாழை உள்ளிட்வை கர்நாடகாவிற்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

கர்நாடகா மாநிலத்தில் இருந்து மக்காசோளம் நாமக்கல் மாவட்டம் கொண்டு வரப்படுகிறது. அதேபோல் தக்காளி மற்றும் காய்கறிகள் கோவைக்கு கொண்டு வரப்படுகிறது. கோவை மாவட்டத்தில் இருந்து பல்வேறு பொருட்கள் நாள்தோறும் கர்நாடகா மாநிலத்திற்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த வேலை நிறுத்தத்தால் வர்த்தகம் பெரியதும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments