Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டேட் பாங்க் வட்டி குறைப்பு!

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2008 (17:21 IST)
பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி கால் விழுக்காடு வட்டியை குறைத்துள்ளத ு.

நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி கால் விழுக்காடு வட்டியை குறைப்பதாக மும்பை பங்குச் சந்தைக்கு அறிவித்தத ு. தற்போது இந்த வங்கி 12.75 விழுக்காடு வட்டி வசூலித்து வருகிறத ு. இதை 12.50 விழுக்காடாக குறைத்துள்ளத ு. இது பிப்ரவரி 16 ந் தேதி முதல் அமலுக்குவரும ்.

இந்த வட்டி குறைப்பு பெரிய நிறுவனங்கள் வாங்கும் கடன ், மாறும் வீட்டு கடன ், வாகன கடன் உட்பட எல்லா வகை கடன்களுக்கும் பொருந்தும ்.

ஏற்கனவே கனரா வங்க ி, ஆந்திரா வங்கி ஆகியவை வீட்டு கடன ், நுகர்வோர் கடனுக்கு 1 விழுக்காடு வட்டியை குறைத்துள்ள ன.

இதே போல் ஹெச ். ட ி. எப ். சி. வங்கி வீட்டு கடனுக்கு கால் விழுக்காடு வட்டியும ், பஞ்சாப் ஹவுசிங் பைனான்ஸ் வீட்டு கடனுக்கு அரை விழுக்காடு வட்டியும் குறைத்துள்ள ன.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் வட்டியை குறைக்க போகிறத ு. இது நுகர்வோர் கடன் போன்ற குறிப்பிட்ட கடனுக்கு மட்டும் கால் விழுக்காடு வட்டியை குறைக்கும் என தெரிகிறத ு.

வட்டி குறைப்பு பற்ற ி, இதன் மேலாண்மை இயக்குநர் எஸ ்.ஏ. பட் செய்தியாளரிகளிடம் இன்று கூறுகையில ், வருகின்ற வெள்ளிக் கிழமை வங்கியின் சொத்த ு- கடன் குழு கூட்டம் நடை பெறவுள்ளத ு. இதில் வட்டி குறைப்பு பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார ்.

ஆனால் இது வைப்பு நிதிக்கும் வழங்கும் வட்டியை குறைப்பது பற்றி மார்ச் மாதத்தில் முடிவு எடுக்கும் என்று தெரிகிறத ு.

மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் நாளை புது டெல்லியில் வங்கிகளின் சேர்மன ், மேலாண்மை இயக்குநர்களை சந்திக்க உள்ளார ். இதில் வட்டி குறைப்பு குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறத ு.

ரிசர்வ் வங்கி ஆளுநர் ஒய ். வ ி. ரெட்டி சென்ற ஜனவரி 29 ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்ட போத ு, வட்டி குறைக்க முடியுமா என்று பரிசீலிக்கும் படி கேட்டுக் கொண்டார் என்பது நினைவில் கொள்ளத்தக்கத ு.

இதற்கு முன்னதாக மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ஜனவரி 4 ந் தேதி அன்று வங்கி மேலானமை இயக்குநர்களை சந்தித்த பிறக ு, பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து பராமரிக்க வங்கிகள் அரை விழுக்காடு வட்டியை குறைப்பது பற்றி பரிசீல்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணமா? காவல் ஆணையர் விளக்கம்..!!

ஆற்காடு சுரேஷ் உருவப்படம் அருகே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த கத்தி.. அதிர்ச்சி தகவல்..!

UG நீட் தேர்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும்..! காங்கிரஸ் வலியுறுத்தல்..!!

உத்திர பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து.! சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

Show comments