Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று பங்கு சந்தை முன்னேறுமா?

Webdunia
வெள்ளி, 1 பிப்ரவரி 2008 (10:50 IST)
உந்துசக்தி வரும் போகும்- பங்குச் சந்தை எதை நோக்கி செல்கிறத ு?

பொருளாதார கொள்கை- அமெரிக்க ரிசர்வ் வங்கி கூட்டம், இலாபகணக்கு, முன்பேர சந்தை ஒப்பந்தம் முடிந்துவிட்டது.

அமெரி்க்க ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பால் எவ்வித பாதிப்பும் இல்லை- அமெரிக்க ரிசர்வ் வங்கி இந்த அளவு வட்டியை குறைத்தும், பங்குச் சந்தையில் எவ்வித பாதிப்பும் இல்லை என்பதே நம்ப முடியாததாக இருக்கிறது. இந்த வட்டி குறைப்புக்கு பிறகு ஆசிய சந்தையி்ல் எவ்வித மாற்றமும் இல்லை. அமெரிக்க பங்குச் சந்தை எதிர்பார்த்தது போலவே, அதன் ரிசர்வ் வங்கி அரை விழுக்காடு வட்டியை குறைத்துள்ளது. அமெரி்க்க ரிசர்வ் வங்கி கவர்னர் பென் பெர்னேக் அல்லது ரிசர்வ் வங்கி முடிந்த அளவு நன்மையை செய்துள்ளனர்.

இதை ஏன் கூறுகின்றோம் என்றால், வெளியில் இருந்து உந்து சக்தி வரும் போகும், இதை எல்லா பங்குச் சந்தைகளும் சிறிய அளவில் பயன்படுத்திக் கொள்ளும். நமது பங்கச் சந்தை நிலையில்லாமல் ஏற்ற இறக்கத்துடனேயே இருக்க போகின்றதா, இது எந்த திசையில் செல்ல போகிறது என்ற முக்கியமான கேள்விக்கு, அடுத்த சில வாரங்களில் கேள்விக்கு பதில் தெரிந்து விடும்.

மற்ற நாட்டு பங்குச் சந்தைகளில் இருந்து, இந்திய பங்குச் சந்தை மாறுபட்டு இருக்க போகி்ன்றதா இல்லையா என்பதே சந்தேகத்திற்கு உரியதாக இருக்கிறது. ஏனெனில் மற்ற நாட்டு பங்கச் சந்தைகளில் நிகழும் மாற்றத்தின் தாக்கம், இங்கு இல்லை.

முதலாவதாக தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 5000 முதல் 5500 என்ற அளவில் இருப்பதுதான் நல்லது. 5,500 புள்ளிக்கு மேல் போனால் என்னவாகும் என்று உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம். இங்கு நிஃப்டி 5,500ஐ தாண்டுவதற்கு, மற்ற நாடுகளின் பங்குச் சந்தைகளில் எழுச்சி உள்ளதா என்ற கேள்வி எழலாம்.
மற்றொரு எதிர்பார்ப்பும் உள்ளது. அதுதான் மத்திய அரசின் நிதி-நிலை அறிக்கை. இதில் வரி குறைப்பு இருக்கும் என்ற பேச்சு நிலவுகிறது. இதனால் இதன் பாதிப்பு சந்தைகமில்லாமல் நிச்சயமாக இருக்கும்.

நமது பங்குச் சந்தை படிப்படியாக ஆனால் மெதுவாக மீண்டும் பலப்படும் என்று நம்புகின்றேன்.

இன்று பங்குச் சந்தை எப்பட ி?

அந்நிய நாடுகளில் இருந்து நம்பிக்கையான தகவல் வராவிட்டால். காலையிலேயே பங்கச் சந்தை பலவீனமாகவே இருக்கும். அத்துடன் காலையில் அதிக அளவு குறியீட்டு எண் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். மதியத்திற்கு மேல் பங்கு விலைகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. ஆனால் நாள் முழுவதும் இது தொடராது. இறுதியில் விலை குறையும்.

மின் உற்பத்தி, ரியல் எஸ்டேட், வங்கி, இயந்திர உற்பத்தி, மருந்து உற்பத்தி நிறுவனங்களின் பங்கு வர்த்தகம் மந்தமாக இருக்கும். இதன் விலை குறையும்.

ஐ.வி.ஆர்.பிரேம், ரிலையன்ஸ் எனர்ஜி, ரிலையன்ஸ் கேப்பிடல், எஸ்ஸார் ஆயில், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், அன்சால் இன்ப்ரா, பார்தி ஏர்டெல், ஆப்டேக் டிரைனிங் ஐடியா ஆகிய பங்குகள் வாங்க ஆர்வம் காண்பிப்பார்கள். நேற்று முன் பேர சந்தையில் ரூ.104937.32 கோடி மதிப்பிற்கு பிப்ரவரி மாதத்திற்கு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. முன்பேர சந்தையில் பிப்ரவரி மாதத்திற்கு வர்த்தகர்கள் மத்தியில் குறைந்த அளவே ஆர்வம் இருந்தது.

இன்று முன்பேர சந்தையில் பிப்ரவரி மாதத்தின் முதல் நாள் என்பதால், இந்த மாதத்திற்கான ஒப்பந்தத்தில் ஏற்றம் இருக்கலாம். இதில் நிஃப்டி 5165 புள்ளிக்கும் அதிகமாக இருந்தால், அன்றாட பங்குச் சந்தையில் நிஃப்டி 5220 /5270/5350 என்ற அளவில் உயரலாம். 5350க்கும் மேல் அதிகரித்தால் இிது 5450 வரை உயர வாய்ப்புள்ளது. ஆனால் நிஃப்டி 5165 க்கு மேல் அதிகரிக்காவிட்டால், இது 5120 /5070/5000 என குறைய வாய்ப்பு உள்ளது. 5 ஆயிரத்திற்கும் குறைந்து விட்டால் 4900 நோக்கி சரியும்.
இன்று ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஐ.டி.பி.ஐ, ரிலையன்ஸ் எனர்ஜி, எஸ்.ஆர்.எப்,புஞ்ச் லாயிட், ஐ.ஓ.சி, டாடா ஸ்டீல், பாந்த்லோன், ஐ.எஸ்.பி.ஐ ஆகிய பங்குகளில் கவனம் செலுத்தலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணமா? காவல் ஆணையர் விளக்கம்..!!

ஆற்காடு சுரேஷ் உருவப்படம் அருகே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த கத்தி.. அதிர்ச்சி தகவல்..!

UG நீட் தேர்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும்..! காங்கிரஸ் வலியுறுத்தல்..!!

உத்திர பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து.! சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

தி.மு.க. ஆட்சியில் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.! அண்ணாமலை காட்டம்..!!

Show comments