Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் விலை சர்வதேச சந்தையில் வரலாறு காணாத அளவு உயர்வு!

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2008 (19:03 IST)
தென் ஆப்பிரிக்காவில் கடும் மின் வெட்டால் தங்கச் சுரங்கங்களில் தங்கம் வெட்டி எடுக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கத்தி்ன் விலை கடுமையாக அதிகரித்தது.

தென்ஆப்பிரிக்காவில் உள்ள தங்க சுரங்கங்களில் தான், அதிகளவு தங்கம் வெட்டி எடுக்கப்படுகிறது. இங்கு அங்கோலா கோல்ட் அசான்தி, கோல்ட் ஃபீல்ட் மற்றும் ஹார்மோனி ஆகிய நிறுவனங்கள் தங்கம் வெட்டி எடுத்து சுத்திகரித்து ஏற்றுமதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இத்துடன் மற்றொரு விலை உயர்ந்த உலோகமான பிளாட்டினமும் தென் ஆப்பிரிக்காவில் தான் அதிக அளவு வெட்டி எடுக்கப்படுகிறது.

இங்கு கடுமையான மின் வெட்டு நிலவுகின்றது. இதனால் தங்கம், பிளாட்டினம் சுரங்கங்களில், இந்த உலோகங்களை வெட்டி எடுக்கம் வேலை நிறுத்தப்பட்டுள்ளது. இதுவே தங்கம், பிளாட்டினம் போன்ற உலோகங்களின் விலை கடுமையாக உயர்வதற்கு காரணம் என்று தெரிகிறது.

சிங்கப்பூரில் இன்று இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம், பிளாட்டினம் விலை அதிகரித்தது. இதே போல் வெள்ளியின் விலையும் அதிகரித்தது. இங்கு வெள்ளியின் விலை கடந்த 27 வருடத்தில் இல்லாத அளவு அதிகரித்தது. பலாட்டினத்தின் விலை கடந்த 20 மாதங்களில் இல்லாத அளவு உயர்ந்தது.

நியூயார்க் சந்தையில் நேற்று 1 அவுன்ஸ் (28.35 கிராம ்) தங்கத்தின் 913.00/914.00 டாலராக இருந்தது. இன்று 916.50/917.50 டாலராக அதிகரித்தது. இதன் விலை சென்ற வெள்ளிக் கிழமையன்று 923.40 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் விலை அடுத்து வரும் வாரங்களில் 1 அவுன்ஸ் (28.35 கிராம ்) 950 டாலராக உயரும் என்று வர்த்தகர்கள் கணிக்கின்றனர்.

சிங்கப்பூரில் தங்கம் மற்றும் விலை உயர்ந்த உலோகங்களின் மொத்த வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பிலிப் ப்யூச்சர் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த வில்லியம் க்யூவான் கூறும் போது, அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டியை மேலும் குறைக்கும் (சென்ற வாரம் முக்கால் விழக்காடு குறைத்தத ு) என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் அரிய உலோகங்களின் விலை அதிகரித்து வருகிறது. பிளாட்டினத்தின் விலை 1 அவுன்ஸ் (28.35 கிராம ்) 1,685 முதல் 1,690 டாலராக அதிகரித்துள்ளது. இதன் விலை முன்பு 1,671.50/1,676.50 டாலராக இருந்து. சென்ற வெள்ளிக் கிழமை இது வரை இல்லாத அளவாக 1,697 டாலராக உயர்ந்தது.

பிளாட்டினம் நகை செய்வதற்கும், வாகனங்களுக்கு தேவையான காட்டிலாஸ்ட் தயாரிப்பதற்கும் பயன்படுகிறது. சீனா போன்ற நாடுகளில் எல்லோரும் கார்களை வாங்க விரும்புகின்றனர். இதனால் இந்த நாடுகளில் கார் விற்பனை அதிகரித்து உள்ளது.இதனால் பிளாட்டினத்தின் தேவையும் அதிகரித்துள்ளதால், இதன் விலை அடுத்த ஆறு மாதங்களில் 1 அவுன்ஸ் 1,800 டாலராக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கின்றேன். தங்கம் விலை 1 அவுன்ஸ் 888 டாலராக குறைய வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

சிங்கப்பூரில் தங்கத்தி்ன் விலை அதிக அளவு உயர்ந்தது. இதனால் வர்த்தகமும் மந்த கதியிலேயே இருந்தது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து ஒரு வர்த்தகர் கூறும்போது, தங்கத்தின் தற்போதைய விலை, அதன் யதார்த்தமான விலை அல்ல என்று பெரும்பான்மையான நகை உற்பத்தியாளர்கள் கருதுகின்றனர். அதனால் அவர்கள் தங்கம் வாங்குவதில் இரு வேறுபட்ட மனநிலையில் இருக்கின்றனர். இதன் விலை குறைந்தால், அவர்களும் பாதிக்கப்படுவார்கள். அதிக அளவு விலை குறைவதை நகை வியாபாரிகளும் விரும்பவில்லை. தங்க நகை வியாபார்கள் அவர்களிடம் உள்ள தங்கத்தை விற்பனை செய்து விட்டு, ரொக்க பணமாக வைத்துக் கொள்வதையே விரும்புகின்றனர் என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments