Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரஸ்பர நிதியில் முதலீடு செய்தால் அதிக இலாபம்

Webdunia
புதன், 9 ஜனவரி 2008 (10:52 IST)
பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வதை விட, பரஸ்பர நிதிகள் மூலமாக முதலீடு செய்வதால் அதிக வருவாய் கிடைக்கிறது.

பங்குச் சந்தையிலும், நிதி சந்தையிலும் முதலீடு செய்பவர்கள் நேரடியாக முதலீடு செய்கின்றனர். பங்குச் சந்தையில் விற்பனையாகும் பங்குகளில், எந்த பங்கு வாங்கினால் அதிக இலாபம் கிடைக்கும். குறிப்பிட்ட பங்கு விலை அதிகரிக்குமா, குறையும ா என்பதை கணித்து பங்குகளை வாங்க வேண்டும்.

பங்குச் சந்தையில் தினமும் பங்குகளின் விலை அதிகரிப்பது அல்லது குறைவது என்ற போக்கு நிலவுகிறது. பங்கு சந்தையின் போக்கு, பங்கு சந்தையில் முதலீடு செய்யும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள், அத்துடன் தினசரி வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் ஆகியோரை கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டு எண்கள் குறையும் போதே சில முதலீட்டாளர்களின் ரத்த அழுத்தமும் மாறுபட துவங்கும். குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள் அன்றாடம் நிலவரத்தை உண்ணிப்பாக கவனித்து, விற்பனை செய்வது அல்லது வாங்குவது என்பது கடினமான காரியம்.

இவர்களுக்காகவே பரஸ்பர நிதி நிறுவனங்கள் யூனிட்டுகளை வெளியிட்டு முதலீடு திரட்டுகின்றன. இதை பங்கு மற்றும் நிதிச் சந்தை நிபுணர்கள் முதலீடு செய்கின்றனர். இந்த முதலீட்டில் இருந்து கிடைக்கும் வருவாய் யூனிட் வாங்கியவர்களுக்கு பிரித்து தரப்படுகிறது.

சென்ற வருடம் பங்குச் சந்தையில் நேரடியாக மூதலீடு செய்ததை விட, பரஸ்பர நிதி நிறுவனங்கள் மூலமாக செய்த மூதலீட்டிற்கு அதிக வருவாய் கிடைத்திருப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 47.1 விழுக்காடு உயர்ந்துள்ளது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 54.8 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஆனால் 152 பரஸ்பர நிதிகளின் வருவாய், பங்குச் சந்தை குறியீட்டு எண்களின் வருவாயை விட அதிகமாக உள்ளது வேல்யூ ரிசர்ச் என்ற பங்குச் சந்தை ஆய்வு நிறுவனத்தின் ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது.

2007 ஆம் ஆண்டில் 209 பரஸ்பர நிதிகளில் 13 முதலீடு திட்டங்களில் முதலீடு செய்யும் யூனிட்டுகளை வாங்கியவர்களின் முதலீட்டின் மதிப்பு 90 முதல் 112 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.

வரி சேமிப்புடன், பங்குச் சந்தை மற்றும் நிதிச் சந்தையில் முதலீடு செய்யும் 209 பரஸ்பர நிதி திட்டங்களில், 57 திட்டங்கள் மட்டுமே சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகளை விட குறைவான வருவாய் கிடைத்துள்ளது.

பரஸ்பர நிதிகளில் டாராஸ் லிப்ரா டாக்சீல்ட், ஜே.எம்.பேசிக் ஃபண்ட் ஆகிய இரண்டு பரஸ்பர நிதி திட்ட யூனிட்டுகளின் வருவாய் 111 விழுக்காடாக உள்ளது.

ஸ்டான்டர்ட் சார்டர்ட் பிரிமியர் ஈக்விட்டி,டாரஸ் டிஸ்கவரி, சுந்தரம் பி.என்.பி. பரிபாஸ் கேபக்ஸ் ஆஃபர்சுனிட்டி, ஜே.எம்.எமர்ஜிங் லீடர், ஐ.சி.ஐ.சி.ஐ புருடென்டால் இன்பிராக்சர்., டி.டபிள்யூ.எஸ் இன்வெஸ்ட்மென்ட் ஆஃபர்சுனிட்டி, கனரா ரபிக்கோ இன்பிராக்சர், கோடக் ஆஃபர்சுனிட்டி, ரிலையன்ஸ் ரெகுலர் சேவிங்ஸ் ஈக்விட்டி ஆகிய பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்திருந்தவர்களுக்கு சுமார் 100 விழுக்காடு வருவாய் கிடைத்துள்ளது.

இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட் ட 209 பரஸ்பர நிதி திட்டங்களில் 139 திட்டங்களில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக வருவாய் கிடைத்துள்ளது.
சென்ற வருடம் பங்குச் சந்தையில் பங்குகள் அதிகளவு வாங்கப்பட்டது.

இதனால் இதன் விலைகளும் அதிகரித்தன. பங்குகளின் விலை உயர்வு காரணமாக, பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்த பரஸ்பர நிதிகளின் வருவாய் அதிகரித்தது.எந்த பரஸ்பர நிதியும் நஷ்டமடையவில்லை.

முன்பு பரஸ்பர நிதிகள் பொதுவாக பங்குச் சநதையில் முதலீடு செய்வது, நிதிச் சந்தையில் முதலீடு என்ற திட்டங்களுடன் யூனிட்டுகளை வெளியிட்டு முதலீடு திரட்டி வந்தன.

சென்ற வருடத்தில் இருந்து குறிப்பிட்ட துறையில், அதனைச் சார்ந்த தொழில்களில் முதலீடு செய்யும் திட்டங்களுடன் யூனிட்டுகளை வெளியிடுகின்றன. உதாரணமாக அடிப்படை கட்டமைப்பு துறை, மின் உற்பத்தி மற்றும் விநியோகம் போன்று குறிப்பிட்ட துறை சார்ந்த பங்குகள்ஸ, கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய யூனிட்டுகளை வெளியிட்டு நிதி திரட்டுகின்றன.

இது போல் சென்ற வருடம் துறை சார்ந்த யூனிட் வெளியிட்ட பரஸ்பர நிதி திட்டங்களில் ரிலையன்ஸ் பவர் டைவர்சிபைட் பவர் செக்டர் யூனிட்டுகளுக்கு 120 விழுக்காடு வருவாய் கிடைத்துள்ளது.

இது போன்ற திட்டங்களில் மட்டுமல்லாது, பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்து, அதன் லாப-நஷ்டத்தை கணிக்க முடியாதவர்கள் யூனிட்டுகளில் முதலீடு செய்வதன் மூலம் அதிக வருவாய் பெற்றுள்ளனர் என்பது வால்யூவ் ரிசர்ச் நிறுவனத்தின் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இதன் தலைமை நிர்வாக அதிகாரி திரேந்திர குமார் கூறுகையில்,
சிறு முதலீட்டாளர்கள் பரஸ்பர யூனிட்டுகளில் முதலீடு செய்யும் போது சில மாதங்கள் அல்லது ஒரு வருடம் மட்டும் அதிக வருவாய் கிடைக்கும் திட்டங்களில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக நீண்ட காலம் தொடர்ச்சியாக வருவாய் கிடைக்கும் திட்டங்களின் யூனிட்டுகிள் முதலீடு செய்ய வேண்டும் என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநரின் விளக்கம் சில நிமிடங்களில் நீக்கம்..!

சட்டமன்றத்தில் உரையாற்றவில்லை.. மூன்றே நிமிடத்தில் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி

Show comments