Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரும் எதிர்பார்ப்புடன் ரிலையன்ஸ் பவர்!

Webdunia
செவ்வாய், 8 ஜனவரி 2008 (13:35 IST)
இந்திய பங்குச் சந்தைகளின் வரலாற்றிலேயே மற்ற எந்த பங்கு வெளியீட்டிற்கும் இல்லாத அளவு ரிலையன்ஸ் பவர் பங்கு வெளியீடு பெரிய அளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அனில ் அம்பான ி குழுமத்தைச ் சேர்ந் த ரிலையன்ஸ ் பவர ் நிறுவனம ் பங்குகள ை வெளியிட்ட ு ர ூ.11 ஆயிரத்த ு 700 கோட ி திரட் ட உள்ளத ு.

நாட்டின ் ப ல மாநிலங்களில ் மின ் உற்பத்த ி நிலையங்கள ை அமைக்க இந்த பொதுப் பங்கு வாயிலாக முதலீடு திரட்டப்படுகிறது. இதற்கா க ரிலையன்ஸ் பவர் 26 கோட ி பொதுப ் பங்குகள ை வெளியிடுகிறத ு.

இதன ் பங்க ு வில ை ர ூ.405 முதல ் ர ூ.450 க்குள ் இருக்கும ்.
இது சிறு முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்கள் உட்பட எல்லா தரப்பிலும் இருந்தும் பலத்தை வரவேற்பை பெறும் என்று, பங்கு வெளியீட்டில் தொடர்புள்ள வங்கி அதிகாரிகள் கருதுகின்றனர். இந்த பங்குகளை கேட்டு ரூ.2 கோடி மதிப்பிற்கு விண்ணப்பங்கள் வந்து குவியும் என்று முதலீட்டு வங்கி அதிகாரிகள் கருதுகின்றனர்.
இது வரை இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் கடந்த வருடம் வெளியிடப்பட்ட முந்த்ரா போர்ட் அண்ட் எஸ்.இ.இஜட். ( Mundra Port & SEZ) நிறுவனம் வெளியிட்ட பொதுப் பங்குக்கு அதிகளவு விண்ணப்பங்கள் வந்தன. இதற்கு 115 மடங்கு விண்ணப்பங்கள் வந்தன. இதே போல் பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டிற்கும் பலத்த வரவேற்பு இருந்தது.
இதை விட ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டிற்கு அதிக வரவேற்பு இருக்கும் என்று தெரிகிறது. ஏனெனில் பங்குகளுக்கு விண்ணப்பிக்க வசதியாக கடந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார் 1 லட்சம் டி-மாட் கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன.
கடந்த டிசம்பர் இறுதிவரை சுமார் 1 கோடி டி-மார்ட் கணக்குகள் மட்டுமே இருந்தன. சென்ற முன்று தினங்களில் புதிதாக சுமார் 1 லட்சம் டி-மார்ட் கணக்குகள் துவக்கி இருப்பதில் இருந்தே, ரிலையன்ஸ் பவர் பங்குகளுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கும் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது என்று முதலீட்டு வங்கி நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர்.
ரிலையன்ஸ் பவர் பங்கு வெளியீட்டு விண்ணப்பங்களை பதிவு செய்யும் நிறுவனங்களில் ஒன்றான ஜே.எம்.பைனான்சியல் நிறுவனத்தின் செயல் இயக்குநரும், தலைமை அதிகாரியுமான அதுல் மேக்ரா கூறுகையில், ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பொது பங்கு வெளியீடு யாரும் எதிர்பார்க்காத அளவு வெற்றி பெறும். ஆனால் இதற்கு எத்தனை மடங்கு விண்ணப்பங்கள் வந்து குவியும் என்பது தான் இப்போது எல்லோரி்ன் எதிர்பார்ப்பு என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணமா? காவல் ஆணையர் விளக்கம்..!!

ஆற்காடு சுரேஷ் உருவப்படம் அருகே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த கத்தி.. அதிர்ச்சி தகவல்..!

UG நீட் தேர்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும்..! காங்கிரஸ் வலியுறுத்தல்..!!

உத்திர பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து.! சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

Show comments