Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூ.டி.ஐ. டிவிடென்ட் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2007 (17:30 IST)
இந்தியாவில் முன்னணி பரஸ்பர நிதியங்களில் ஒன்றான யூ.டி.ஐ. அதன் ஒரு பரஸ்பர நிதி திட்டத்திற்கான பங்கு ஈவுத் தொகையை (டிவிடென்ட ்) அறிவித்துள்ளது.

யூ.டிஐ-வி.ஐ.எஸ்.-ஐ.எல்.பி. என்று எப்போதும் யூனிட்டுகளை திரும்ப விற்பனை செய்யும் ரூ.10 முகமதிப்புள்ள ஒரு யூனிட்டிற்கு ரூ.1.40 பைசா பங்கு ஈவுத் தொகையாக அறிவித்துள்ளது. இது 14 விழுக்காடு ஈவுத்தொகையாகும்.

இந்த ஈவுத் தொகைக்காண கணக்கீட்டு நாள் டிசம்பர் 20. இந்த தேதியில் யூனிட் யார் பெயரில் உள்ளதோ அவருக்கு பங்கு ஈவுத்தொகை வழங்கப்படும்.

யூ.டி.ஐ. இந்த யூனிட்டை 2002 ஆம் ஆண்டில் வெளியிட்டது. இது ஐந்தாவது முறையாக வழங்கப்பட்டுள்ள பங்கு ஈவுத்தொகையாகும். இதில் திரட்டப்பட்ட நிதி நவம்பர் 30 ந் தேதி கணக்குபடி 32.11 விழுக்காடு பங்குச் சந்தையிலும், மீதம் 67.89 விழுக்காடு நிறுவனங்களின் கடன் பத்திரங்கள், அரசு கடன் பத்திரங்கள், மற்றும் நிதிச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments