Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடனுக்கான வட்டி குறையாது – பட்டாச்சார்யா!

Webdunia
புதன், 12 டிசம்பர் 2007 (16:07 IST)
வங்கிகள் வழங்கும் கடன் மீதான வட்டி விகிதம் குறையாது என்று பாரத ஸ்டேட் வங்கியின் மேலாண்மை இயக்குநர் டி.எஸ்.பட்டாச்சார்யா கூறினார்.

கொல்கத்தாவில் இந்திய தொழிலக கூட்டமைப்பு பின்டெக் 2007 என்ற கருத்தரங்கு நடத்துகிறது. இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்துள்ள பட்டாச்சார்யா செய்தியாளர்களிடம் கூறியதாவத ு:

“அந்நிய செலவாணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருகிறது. வங்கித் துறையில் நிதி குறைந்த அளவே வருகின்றது. இத்தகைய சூழ்நிலையில் வங்கிகள் வழங்கும் கடன் மீதான வட்டியை குறைப்பது சாத்தியமில்லை.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருவதால் வங்கிகளில் அயல்நாடு இந்தியர்கள் வங்கிகளில் வைப்புநிதி வைப்பது குறைந்து விட்டது. இவற்றினால் கடன் கொடுப்பதற்கு பணத்தை திரட்டுவது சிரமமாக இருக்கின்றது.

அதே நேரத்தில் வங்கிகளிடம் அதிகளவு கடன் கேட்கின்றனர். இதற்கு ஏற்றார் போல் வங்கிகளால் நிதியை திரட்ட இயலவில்லை. அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் உரிமை பங்குகள் வெளியிடப்படும ் ” என்று தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

Show comments