Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பருப்பு இறக்குமதிக்கு விலைப்புள்ளி!

Webdunia
புதன், 28 நவம்பர் 2007 (11:38 IST)
நபீட் என்று சுருக்கமாக அழைக்கப்படும் தேசிய விவசாய விளைபொருட்கள் கூட்டுறவு விற்பனை இணையம் பருப்பு வகைகளை இறக்குமதி செய்வதற்கான விலைப்புள்ளியை கோரியுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு கட‌ந்த 26 ஆ‌ம் தேதி நபீட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஆஸ்‌ட்ரேலியா அல்லது மற்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாணி, பயத்தம் பருப்பு. ஆகியவை 5 ஆயிரம் டன் அளவு அதன் மடங்கிலும், ஆஸ்‌ட்ரேலியா அல்லது கனடாவில் உற்பத்தி செய்ய‌ப்பட்ட மைசூர் பருப்பு (உடைக்காதத ு), மியான்மரில் உற்பத்தி செய்.ப்பட்ட துவரம் பருப்பு ஆகியவை 2 ஆயிரம் டன் அதன் மடங்கிலும் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இவை 2007 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்தவைகளாக இருக்க வேண்டும். இவை இந்த ஆண்டு டிசம்பரில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் வழங்கப்பட வேண்டும்.

இந்த பருப்பு வகைகளையும், தாணியங்களையும் மும்பை, கான்டாலா, சென்னை, தூத்துக்குடி, கொல்கத்தா துறைமுகங்களில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். இந்த விலைப்புள்ளி சமர்‌ப்பிக்க கடைசி நாள் நவம்பர் 29 ஆ‌ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments