Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா சிமென்ட்ஸ் 15 கோடி டாலர் திரட்டுகிறது

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2007 (14:39 IST)
இந்தியா சிமென்ட்ஸ் குளோபல் டிபாசிட்டரி ரிசிப்ட் ( அந்நி ய நாட்டு வைப்பு நித ி ), பாரி்ன் கரன்ஸி கன்வர்டபிள் பாண்ட் (அந்நிய செலவாணி பங்கு மாற்று பத்திரம ் ) ஆகியவைகளை வெளியிட்டு 15 கோடி அமெரிக்க டாலர் (சுமார் ரூ.600 கோட ி ) திரட்டப் போவதாக அறிவித்துள்ளது.

இதற்கான ஒப்புதலை பங்குநர்களிடம் பெற, வரும் டிசம்பர் 14 ந் தேதி சிறப்பு பங்குநர்களின் கூட்டத்தை கூட்டுகின்றது.

இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இதன் மேலான்மை இயக்குநர் என்.ஸ்ரீனிவாசன் கூறியதாவத ு, எங்கள் நிறுவனம் ரூ.1,450 கோடி செலவில் விரிவாக்கம் செய்ய உள்ளது. இதன் ஒரு பகுதி முதலீடு திரட்டுவதற்காக சுமார் ரூ.600 கோடி திரட்ட அந்நிய செலவாணி பங்கு மாற்று பத்திரம் அந்நிய நாட்டு வைப்பு நிதி மூலம் முதலீடு திரட்ட திட்டமிட்டுள்ளோம். மீதம் தேவைப்படும் முதலீடிற்கு நிறுவனத்தின் உள் நிதியிலும், நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கப்படும்.

எங்கள் நிறுவனம் ராஜஸ்தானிலும், ஹிமாசல பிரதேசத்திலும் தலை ஒரு சிமென்ட் ஆலைகளை அமைக்க போகிறது. இதில் வருடத்திற்கு 35 லட்சம் முதல் 40 லட்சம் டன் சிமென்ட் உற்பத்தி செய்ய முடியும். அத்துடன் 40 முதல் 50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையம் அமைக்க உள்ளோம். நிலக்கரி போக்குவரத்துக்காக 40 ஆயிரடம் டன் சரக்கு கொண்டு செல்லும் கப்பல் வாங்க உள்ளோம்.

தற்போது நடைபெற்று வரும் விரிவாக்கம், எதிர் காலத்தி‌ல் திட்டமிட்டுள்ள விரிவாக்கம் முடிவடையும் நிலையில் சிமென்ட் உற்பத்தி தற்போது உள்ளதைவிட இரண்டு மடங்காக அதிகரிக்கும். இப்போது வருடத்திற்கு 90 லட்சம் டன் சிமென்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் விரிவாக்கம் அடுத்த ஆண்டு நடுவில் முடிவடையும். அப்போது உற்பத்தி திறன் 140 லட்சம் டன்னாக உயரும். வட மாநிலங்களில் புதிய சிமென்ட் ஆலை அமைக்கும் பணி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கப்படும். இது 2010 ஜனவரியில் முடிவடையும்.

எங்கள் நிறுவனம் இந்தோனிஷியாவில் இருந்து வருடத்திற்கு 9 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்கிறது. நிலக்கரியின் விலை இந்திய துறைமுகங்களில் வந்து சேர்வதற்கு 1 டன் 120 டாலருக்கும் அதிகமாக ஆகின்றது. இதில் கப்பல் போக்குவரத்து கட்டணமே 50 டாலராக ஆகின்றது. நிலக்கரி போக்குவரத்திற்கு சொந்தமாக வாங்கப் போகும் கப்பலை, எங்கள் நிறுவனத்தின் ஒரு பிரிவே இயக்கும் என்று ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments