Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழில் துறை உற்பத்தி பாதிப்பு

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2007 (10:56 IST)
இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி, இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் குறைந்துள்ளது என்பது மத்திய புள்ளியியல் அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களில் இருந்து தெரிய வருகிறது.

இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி சென்ற வருடம் செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 6.4 விழுக்காடாக உள்ளது. அக்டோபர் மாதம் தொழில்துறை உற்பத்தி 10.7 விழுக்காடாக இருந்தது.

செப்டம்பர் மாதம் தொழில் துறை உற்பத்தி குறைந்ததற்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு, ரிசர்வ வங்கி பொருளாதார கொள்கையை கடினமாக்கியதால் வங்கி வட்டி அதிகரிப்பு ஆகியவையே முக்கிய காரணம்.

மத்திய புள்ளி விபரம் மற்றும் திட்ட அமலாக்கத்தின் கீழ் உள்ள மத்திய புள்ளியியல் நிறுவனம் 1993-94 ஆம் ஆண்டை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு மாதமும் அரசின் பல்வேறு துறை வளர்ச்சிகளை கணித்து வெளியிடுகிறது.
இந் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள விபரங்கள் வருமாறு.

சென்ற வருடம் செம்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் செப்டம்ப‌ர் மாதத்தில் தொழில் துறை உற்பத்தி 6.4 விழுக்காடு அதிகரித்து உள்ளது. ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சி 9.2 விழுக்காடு அதிகரித்து இருக்கின்றது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் சுரங்கம் துறை உற்பத்தி 6 விழுக்காடும், பல்வேறு பொருட்களின் உற்பத்தி 6.6 விழுக்காடும், மின்துறை உற்பத்தி 4.5 விழுக்காடும் அதிகரித்துள்ளது. இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதத்தில் ( ஏப்ரல் - செப்டம்பர ் ) சுரங்கத்துறை 5.3 விழுக்காடும், பல்வேறு பொருட்களின் உற்பத்தி துறை 9.7 விழுக்காடும், மின்துறை உற்பத்தி 7.7 விழுக்காடும் அதிகரித்துள்ளன. எல்லா துறைகளின் மொத்த வளர்ச்சி 9.2 விழுக்காடு அதிகரித்துள்ளது.

சென்ற வருடம் செப்டம்பர் மாதத்தில் பொருட்களின் உற்பத்தி துறை வளர்ச்சி 12.3 விழுக்காடாக இருந்தது. ஆனால் இந்த செப்டம்பரில் 6.6 விழுக்காடாக குறைந்து விட்டது.

சென்ற நிதியாண்டின் முதல் ஆறு மாதத்தில் பொருட்களின் உற்பத்தி துறை வளர்ச்சி 12.3 விழுக்காடாக இருந்தது. ஆனால் இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதத்தில் 9.7 விழுக்காடாக குறைந்து விட்டது.

நுகர்வோர் பொருட்களின் உற்பத்தி குறைந்து விட்டது.

சென்ற வருடம் செப்டம்பரில் மின் உற்பத்தி 11.3 விழுக்காடாக இருந்தது, இந்த செப்டம்பரில் 4.5 விழுக்காடாக குறைந்து விட்டது.

சுரங்கத்துறையின் உற்பத்தி அதிகரித்து உள்ளது. சென்ற வருடம் செப்டம்பரில் சுறங்க துறை உற்பத்தி 4.3 விழுக்காடாக இருந்தது. இந்த வருடம் செப்டம்பரில் 6 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

வாகன உற்பத்தி 1.6 விழுக்காடும், உணவு உற்பத்தி 1.5 விழுக்காடும் குறைந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

Show comments