Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புள்ளியியல் கணக்கெடுப்பை மாற்ற வேண்டும் : புரோனாப் சென்!

Webdunia
வெள்ளி, 26 அக்டோபர் 2007 (18:34 IST)
புள்ளியியல் கணக்கெடுப்பை முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும் என்று தலைமை புள்ளியல் ஆய்வாளர் டாக்டர் புரோனாப் சென் தெரிவித்தார ்.

புது டெல்லியில் மத்திய புள்ளியில் துறை தயாரித்துள்ள தேசிய வரவு - செலவு புள்ளி விவரம் - கணக்கெடுப்பு முறையும் தகவல் திரட்டும் வழிகளும் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நடந்தத ு.

அப்போது செய்தியாளர்களிடம் பேசும் போது டாக்டர் புரோனாப் சென் கூறியதாவத ு:

இந்திய புள்ளியியல் துறையில் மொத்த உள்நாட்டு உற்பத்த ி, தொழில் துறை உற்பத்தி அட்டவண ை, நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் மற்றும் வேலை வாய்ப்பு ஆகிய புள்ளி விவரங்கள் திரட்டும் முறைகளையும் முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும ்.

காலாண்டு மதிப்பீட்டை பொதுத்துறை நிறுவனங்களும ், தனியார் துறை நிறுவனங்களும் பரவலான முறையில் பயன்படுத்துகின்ற ன. தனியார் துறையினர் அரசின் செலவினங்களில் அதிக கவனம் செலுத்துகின்றனர ். தனியார் துறை நிறுவனங்கள ், இதன் அடிப்படையில் முதலீடு செய்கின்ற ன.

நாங்கள் இந்த புள்ளி விபரங்களை உபயோகப்படுத்தும் நிறுவனங்களுக்க ு, இதனால் அதிக பயனளிக்கும் வகையில் தற்போது நடைமுறையில் உள்ள புள்ளி விவரம் திரட்டும் முறையை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம ்.

தற்போது வேலை வாய்ப்பு பற்றிய புள்ளி விவரம் ஐந்தாண்டுக்கு ஒரு முறை வெளியிடப்படுகிறத ு. இந்த கால இடைவெளியை குறைக்க வேண்டியது அவசியம ். உலக பொருளாதாரத்துடன் இந்திய பொருளாதாரம் இணைக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில ், வேலை வாய்ப்பு பற்றிய புள்ளி விவரங்கள் அதிக முக்கியத்துவம் பெறுகிறத ு.

சிம்லாவில் இருந்து வெளியிடப்படும் நகர்புறங்களில் உள்ள தொழிலாளர்களுக்கான விலைவாசி அட்டவணையை நீக்க அரசு முயற்சித்து வருகிறத ு. தொழிலாளர்களுக்கான விலைவாசி புள்ளி விவரம் ஒரு மாதத்திற்கு ஒரு முறை வெளியிடப்படுகிறத ு. ஆனால் மொத்த விலைவாசி விலைக்குறியீட்டு அட்டவணை வாரத்திற்கு ஒரு முறை வெளியிடப்படுகிறத ு.

இந்த நகர்புறங்களில் உள்ள தொழிலாளர்களுக்கான விலைவாசி அட்டவணைய ை, நகர்புற தொழிலாளர்களுக்கான அட்டவணையாக மாற்ற முடிவு செய்துள்ளத ு. இதற்கு பிறகு நகர்ப்புற தொழிலாளர்களுக்கு தனியாகவும ், கிராமப்புற தொழிலாளர்களுக்கு தனியாகவும் என இரண்டு நுகர்வோர் விலைவாசி அட்டவணை வெளியிடப்படும ்.

இதுமட்டுமல்லாமல் தொழிற்சாலை பிரிவு தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைவாசி அட்டவணையையும் வெளியிட அரசு முடிவு செய்துள்ளத ு.

இந்த நுகர்வோர் விலைவாசி அட்டவணையில் மேலும் பல பொருட்களின் விலைகள ், சேவைக்கான கட்டணங்களும் சேர்க்கப்படும் என்று டாக்டர் புரோனாப் சென் தெரிவித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் பாஜகவின் வெற்றி அதிர்ச்சி அளிக்கிறது: திருமாவளவன்

அதிஷி வெற்றி.. கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா தோல்வி.. மதுபான ஊழல் வழக்கால் ஏற்பட்ட தோல்வி..!

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க நிதி இல்லையா? ஈபிஎஸ் கண்டனம்..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக, பாஜக ஓட்டுக்கள் எங்கே? டெபாசிட் வாங்குமா நாதக?

டெல்லி தேர்தல் நிலவரம் குறித்து எனக்கு தெரியாது: கேரளாவில் பிரியங்கா காந்தி பேட்டி..!

Show comments