Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தையில் தீவிரவாதிகளின் முதலீடு இல்லை : செபி!

Webdunia
வெள்ளி, 26 அக்டோபர் 2007 (11:11 IST)
பங்குச் சந்தையில் தீவிரவாதிகளின் பணம் முதலீடு செய்துள்ளதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று செபி சேர்மன் தாமோதரன் தெரிவித்தார ்.

பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் செபியின் இயக்குநர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றத ு. இந்த கூட்டத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வாயிலாக பங்கேற்பு பத்திரங்கள் ( பார்சிபட்டரி நோட ்) மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை ஒழுங்குபடுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றிய முடிவுகள் எடுக்கப்பட்ட ன.

இந்த கூட்டத்திற்கு பின் செபியின் சேர்மன் தாமோதரனிடம் செய்தியாளர்கள் பங்குச் சந்தையில் தீவிரவாதிகள் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதா என்று கேட்டதற்க ு, தற்போது பங்குச் சந்தையில் தீவிரவாதிகள் முதலீடு செய்திருப்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று பதிலளித்தார ்.

பங்குச் சந்தையில் முதலீட்டு நிறுவனங்கள் மூலம் தீவிரவாதிகள் முதலீடு செய்வதை கண்காணிக் க, எந்த நடைமுறையாவது பின்பற்றப்படுகிறதா என்று சே‌ர்ம‌ன் தாமோதர‌னிட‌ம் கேட்டதற்க ு, எல்லா விஷயங்களுக்கும் செபியால் பதில் பதில் சொல்ல முடியாத ு. தீவிரவாதிகளின் பணம் வருவதை கண்காணிக்க மற்ற புலனாய்வு அமைப்புகளும ், கண்காணிப்பு பிரிவுகள் இருக்கின்ற ன.

பங்குச் சந்தையின் முதலீடுகள் வங்கிகள் வாயிலாக வருகிறத ு. இந்த வங்கிகளில் வாடிக்கையாளரை பற்றிய விபரம் அறியும் முறை இருக்கின்றத ு. அத்துடன் பங்குச் சந்தையில் புரோக்கர்கள ், டிபாசிட்டரி வாயிலாகவும் முதலீடு செய்யப்படுகின்றத ு. இந்த அமைப்புகளிலும் வாடிக்கையாளரை பற்றி அறியும் முறை இருக்கின்றது என்று கூறினார ்.

இந்த வருட தொடக்கத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம ். க ே. நாராயணன ், பங்குச் சந்தையில் முதலீடு அதிகரிப்பதற்கு காரணம ், தீவிரவாதிகள் முதலீடு செய்வதாக கூட இருக்கலாம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கத ு.

அத்துடன் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் நியூயார்க்கில் சென்ற வாரம ், பங்குச் சந்தையில் டிரைவ்விட்சில ், பங்கேற்பு பத்திரங்கள் மூலம் முதலீடு செய்பவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள முடிவதில்ல ை. இவர்கள் பல்வேறு வழிகளில் முதலீடு செய்வதால ், " வாடிக்கையாளரை பற்றி அறியும் முறையி‌ன்படி'' பங்குகளை வாங்குபவ‌ர்க‌ள் யார் என்று தெரிந்து கொள்ள முடிவதில்லை என்று கூறியிருந்தது நினைவு கொள்ளத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

Show comments