Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோசடி காப்பீடு முகவர்கள் : இர்டா!

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2007 (14:26 IST)
காப்பீடு நிறுவனங்கள ், மோசடியில் ஈடுபடும் முகவர்களின் பெயர்களை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று காப்பீடு ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேம்பாட்டு ஆணையம் ( இர்ட ா) கூறியுள்ளத ு.

ஆயுள் காப்பீட ு, மற்ற வகை காப்பீடு முகவர்கள் மீது புகார்கள் வருவது அதிகரித்துள்ள ன. இவ்வாறு புகார்களுக்கு உள்ளான முகவர்கள் மீது காப்பீடு நிறுவனங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும ்.

மோசடியில் ஈடுபட்ட காப்பீடு முகவர்கள் பற்றிய விபரத்தை காப்பீடு நிறுவனங்களின் இணைய தளத்தில் தேதி வாரியாக வெளியிட வேண்டும ். இதில் மோசடியில் ஈடுபட்ட முகவர்களின் அங்கிகாரத்தை எந்த தேதியில் இருந்து ரத்து செய்யப்பட்டது என்ற விபரத்தையும் வெளியிட வேண்டும ்.

காப்பீடு முகவர்கள ், காப்பீடு செய்து கொள்பவர்களுக்கு காப்பீடு திட்டங்கள் பற்றிய முழு விபரங்களையும் விளக்குவதில்ல ை. காப்பீடு திட்டங்களில் அதிக வருவாய் கிடைக்கும் என்று தவறான தகவலை தருகின்றனர் என்று முகவர்கள் மீது இர்டாவிடம் அதிகளவு புகார்கள் வருகின்றன என்று காப்பீடு நிறுவனங்களுக்கு எழதியுள்ள கடிதத்தில் இர்டா தெரிவித்துள்ளதாக விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்ற ன.

இத்துடன் நவம்பர் 1-ந் தேதியில் இருந்து காப்பீடு முகவர்கள் புதிய பாடத்திட்டத்தின் பட ி, பயிற்சி பெற வேண்டும ். இந்த புதிய பாடத்திட்டத்தில் எல்லா விஷயங்களும் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறத ு.

அத்துடன் ஆயுள் மற்றும் வாகன காப்பீட ு, மருத்துவ காப்பீடு போன்ற இதரவகை காப்பீடுகளில ், காப்பீடு செய்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்ட தொகை பற்றி வருடாந்திர ஆய்வை மேற் கொள்ளவும் இர்டா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறத ு. ஏனெனில் அதிகளவு ஈடுப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளதா என்பதை பரிசோதனை செய்வதற்கா க, இந்த ஆய்வு மேற் கொள்ளப்படுகிறது என தெரிகிறத ு.



எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

Show comments