Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காசோலை : ரிசர்வ் வங்கி தெளிவு படுத்த வேண்டும்!

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2007 (19:43 IST)
வெளியூர் காசோலைகளை எத்தனை நாட்களுக்குள் காசோலை செலுத்தியவர் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்பதை ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்த வேண்டும் என்று தேசிய நுகர்வோர் பாதுகாப்பு மன்றம் கூறியுள்ளது.

வங்கியில் வாடிக்கையாளர்கள் செலுத்தும் காசோலையை, அவர்கள் கணக்கில் வரவு வைக்காமல் தாமதிப்பதால், தினசரி ரூ.600 கோடி வரை நுகர்வோர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற மனுவின் மீதான விசாரணையை தேசிய நுகர்வோர் பாதுகாப்பு மன்றம் விசாரித்து வருகிறது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம். பி.ஷா, உறுப்பினர் ராஜ்யலட்சுமி ராவ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அவர்கள், ரிசர்வ் வங்கி தாக்கல் செய்துள்ள விபரங்களின் படி வங்கிகள் காசோலையை பணமாக்கி வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்க 14 நாட்கள் எடுத்துக் கொள்கின்றன. சில வங்கிகள் இதற்கு மேற்பட்ட நாட்களையும் எடுத்துக் கொள்கின்றன என்பது தெரிய வருகிறது.

இந்த இடைப்பட்ட காலத்தில் காசோலையை செலுத்தியவரின் கணக்கில் பணம் வரவு வைக்க முடியுமா, அல்லது காலதாமத்தை குறைக்க அல்லது தவிர்க்க முடியுமா என்பதை ரிசர்வ் வங்கி தெளிவு படுத்த வேண்டும். இந்த காலதாமத்தை தவிர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதற்கான பதிலை பிராமண பத்திரமாக அக்டோபர் 29 ந் தேதி ரிசர்வ் வங்கி தாக்கல் செய்ய வேண்டும் என்று நுகர்வோர் மன்றம் கூறியது.

இந்த வழக்கில் முன்னதாக ரிசர்வ் வங்கி, இதனிடம் 35 வங்கிகள் அளித்த காசோலையை கணக்கில் வரவு வைக்கும் விபரத்தை தாக்கல் செய்தது. அதில் உள்ளூர் காசோலைகள் வசூலானவுடன், காசோலை செலுத்தியவரின் கணக்கில் வரவு வைக்கப்படுகின்றது என்று கூறியிருந்தது.

பொதுத் துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளுக்கு வழிகாட்டி நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வகுக்கிறது.

தேசிய நுகர்வோர் பாதுகாப்பு குழு, வங்கிகள் உள்ளூர் மற்றும் வெளியூர் காசோலையை பணமாக்குவதில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் இழப்பை குறைக்கும் படி ரிசர்வ் வங்கியிடம் கூறியிருந்தது.

தேசிய நுகர்வோர் பாதுகாப்பு குழுவில் முன்னதாக நடந்த விசாரணையின் போது ரிசர்வ் வங்கி காசோலை செலுத்திய 24 மணி நேரத்தில், காசோலை செலுத்தியவரின் கணக்கில் வரவு வைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று ரிசர்வ் வங்கி பதில் கூறியிருந்தது.
இதற்கு நுகர்வோர் பாதுகாப்பு குழு காசோலையை வசூல் செய்து வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைப்பதில் உள்ளூர் காசோலைக்கு குறிப்பிட்ட காலவரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெளியூர் காசோலைகளுக்கு குறிப்பாக பொதுத்துறை வங்கிகள் 14 நாட்கள் வரை எடுத்துக் கொள்கின்றன என்று குறிப்பிட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

Show comments