Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேரடி வரி வருவாய் 40 விழுக்காடு அதிகரிப்பு!

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2007 (18:44 IST)
இந்த நிதியாணடின் முதல் ஆறு மாதங்களில் நேரடி வரி வருவாய் 40 விழுக்காடு அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளத ு.

இந்த நிதியாண்டில் (ஏப்ரல் முதல் அக்டோபர் 15 வர ை) நேரடி வரி வருவாய் 1 லட்சத்து 21 ஆயிரத்து 950 கோடி வசூலாகியுள்ளத ு. சென்ற நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் ர ூ.86 ஆயிரத்து 751 கோடி வசூலானத ு.

நிறுவன வரியாக ர ூ.75,549 கோடி வசூலாகியுள்ளத ு. இது சென்ற வருடத்தைவிட 40.29 விழுக்காடு அதிகம ். சென்ற வருடம் ர ூ.53,853 கோடி வசூலானத ு.

தனி நபர் வருமான வரி ர ூ.46,320 கோடி வசூலாகியுள்ளத ு. இது சென்ற வருடத்தை விட 48.05 விழுக்காடு அதிகம ். ( சென்ற வருடம் ரூ.32,821 கோட ி). பங்கு வர்த்தகத்தின் மீதான வரி ர ூ.3,784 கோடி வசூலாகியுள்ளத ு. இது சென்ற வருடத்தை விட 48.05 விழுக்காடு அதிகம ். ( சென்ற வருடம் ரூ.2,556 கோட ி). வங்கிகளில் பணப் பரிமாற்றத்தின் மீதான வரி ர ூ.284 கோட ி. இது சென்ற வருடத்தை விட 20.22 விழுக்காடு அதிகம ். ( சென்ற வருடம் ரூ.236 கோட ி).

பிரிஞ்ச் பெனிபிட் வரி 2,326 கோட ி. இது சென்ற வருடத்தைவிட 87.92 விழுக்காடு அதிகம் (சென்ற வருடம் ரூ 1,238 கோட ி)

சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் வருமான வரியும ், தனி நபர்கள் செலுத்தும் வருமான வரி 49 விழுக்காடு அதிகரித்துள்ளத ு. இது வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதற்கும ், ஊதியம் அதிகரித்திருப்பதற்கான அடையாளங்கள ்.

வரிமான வரியில் முன்கூட்டியே செலுத்தும் (அட்வான்ஸ் டாக்ஸ ்) வரி வசூல் 30 விழுக்காடு அதிகரித்திருப்பத ு, வர்த்த க, தொழில் துறைகளில் நல்ல லாபம் இருப்பதையும ், பணப்புழக்கம் அதிகமாக இருப்பதற்கான எடுத்துக் காட்டு என்று நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

Show comments